×
 

நடிகை யாஷிகா ஆனந்தின் "எக்ஸ்ரே கண்கள்" படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு..!

எக்ஸ்ரே கண்கள் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் முன்னாள் ராணுவ வீரர் எம்.ஏ.பாலா தயாரித்து இயக்கியுள்ள புதிய திரைப்படம் தான் "எக்ஸ்ரே கண்கள்". மிஸ்ட்ரி கலந்த திரில்லர் படமான இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது முற்றிலுமாக முடிந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் பிறகு படத்தொகுப்பு, பின்னணி இசை உள்ளிட்ட போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, "கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்" என்ற திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து ரசிகர்களிடையே நற்பெயரை பெற்ற எம்.ஏ.பாலா, தற்போது, அதே உற்சாகத்துடன் தனது இரண்டாவது திரைப்படமான "எக்ஸ்ரே கண்கள்" படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில், பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் மருத்துவர் மற்றும் நடிப்புத்துறையில் ஆர்வம் கொண்ட ராம் பிரசாத் ஆகியோர் முன்னணி கதாநாயகன், நாயகியாக நடிக்கின்றனர். இருவரும் இந்தப் படத்தில் மருத்துவராகவே நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மருத்துவம் சார்ந்த பின்னணியில் அமைந்த ஒரு மிஸ்ட்ரி திரில்லர் படமாக உருவாகி வரும் "எக்ஸ்ரே கண்கள்", உண்மையையும், மர்மங்களையும் இணைக்கின்ற கதையம் சத்துடன் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில், கௌஷிக், தீப்ஷிகா, எம்.பி. முத்துப்பாண்டி, எஸ்.எஸ். ஜெய் சிந்த், பசுபதி ராஜ், தீபக், பிரதீப் ராஜ் என பலரும் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் அணியில் ஒளிப்பதிவில் மோகன வேலு, கலை இயக்கத்தில் சதீஷ் குமார். எஸ், நிர்வாக தயாரிப்பாளராக மணிகண்டன்.ஆர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளராக செயல்பட்ட மோகன வேலுவின் காட்சிகள் மிக அழகாகவும் விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், படம் தொடர்பான அடுத்த கட்ட அப்டேட்கள் – படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீடு ஆகியவை வெளியாகும் பொழுது கொடுக்கப்படும் எனவும் கண்டிப்பாக இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கல்யாணம் சரிப்பட்டு வராது.. ஆனால் அம்மாவாக ஆசை..! உண்மையை உடைத்து பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன்..!

இந்த நிலையில் "எங்களது புதிய முயற்சியாக உருவாகியுள்ள 'எக்ஸ்ரே கண்கள்' படப்பிடிப்பு மிகச்சிறப்பாக முடிவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கவுள்ளன. ரசிகர்களிடம் இது ஒரு புதிய அனுபவத்தை தரும் வகையில் படம் அமையும் " என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வெளியீட்டு தேதி மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள், படக்குழுவின் அடுத்த வார அப்டேட்டுகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், மிஸ்ட்ரி மற்றும் த்ரில்லர் படம் என்றவுடன் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள "எக்ஸ்ரே கண்கள்", தமிழ் சினிமாவில் உணர்ச்சி, மர்மம், மருத்துவம், மனித உறவுகள் ஆகிய அனைத்தையும் இணைக்கும் வண்ணம் ஒரு முக்கிய படமாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக திரைத்துறையினர் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போதைய திரைமேடையில் மிகவும் தேவையான, சிந்திக்க வைக்கும் வகையிலான திரைக்கதையோடு, வித்தியாசமான கதாபாத்திரங்களில் யாஷிகா ஆனந்த் மற்றும் ராம் பிரசாத் நடிப்பது ஒரு புதுமையாகும்.

எனவே தற்காலிக உலகில் உண்மையின் வெளிச்சத்தை காட்டும் "எக்ஸ்ரே கண்கள்", தமிழ் சினிமாவின் நவீன முயற்சிகளில் ஒன்றாக வலம் வர உள்ளது.

இதையும் படிங்க: பாகுபலி 10-வது ஆண்டு விழாவில் தேவசேனா இல்லையா..! நடிகை அனுஷ்கா வராதது ஏன்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share