ஒரே வீடியோ...மீண்டும் ட்ரெண்டிங்கில் இர்பான்..! இந்த முறை என்ன பிரச்சனையோ..?
பிரபல யூடியூபர் இர்பான் வெளியிட்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சர்ச்சையில் பிறந்து, சர்ச்சையில் வளர்ந்து தற்பொழுது சர்ச்சையிலேயே வாழ்க்கையை கழித்து வருபவர் தான் பிரபல யுடியூபரான இர்பான். பார்க்க குக்வித் கோமாளி தாமு போல் ஜைஜான்டிக்காக இருக்கும் இவர், ஆரம்பத்தில் உணவுகளை பற்றி பேசி வீடியோக்களை பதிவு செய்து வந்தார். சிறிய பூச்சி முதல் பெரிய முதலை வரை இவர் சாப்பிடாத உணவே இல்லை. எப்படி சினிமாவில் 'ப்ளூ சட்டை மாறன்' ரிவியூ செய்கிறாரோ, அதேபோல் உணவுக்கு ரிவியூ செய்து இன்று பணக்காரனாக நிற்பவர் தான் இர்பான்.
இப்படி சாப்பாட்டில் வீடியோக்களை பதிவு செய்ய ஆரம்பித்தவர், அடுத்ததாக கார்களை குறித்து பேசி அதனையும் பதிவிட ஆரம்பித்தார். அதன்பின் மஞ்சள் கலர் அரக்கனான விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை வாங்கி அனைவரையும் திக்குமுக்காட வைத்தார். அதன்பின் அந்த கார் சரியில்லை என கூறி வேறொரு விலையுயர்ந்த காரை வாங்கி அதில் பயணம் செய்தபடியே வீலாக் எடுத்து வருகிறார்.
இப்படி அருமையாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்வில் நிறைய விருதுகள், பட்டங்கள், ரசிகர்கள் என பலர் வர தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் குக்வித் கோமாளியிலும் கலந்து கொண்டு கலக்கினார். இப்படி பிரபலமானவரின் வளர்ச்சியை கண்களுக்கு தெரிந்து ஒரு சிலர் பார்த்தாலும், அவருடைய கண்ணுக்கு தெரியாத பல கோடி மக்கள் அவரை வறுத்தெடுத்தும் வந்தனர்.
இதையும் படிங்க: ஒரே வார்த்தையில் தயாரிப்பாளரை காலி செய்த நயன்தாரா..! ஹீரோ மாஸ் தான் ஆனால் நயன் டபுள் மாஸ்..!
இப்படி புகழின் உச்சிக்கு சென்றவர் படிப்படியாக அதிலிருந்து இறங்க ஆரம்பித்தார். முதலில் பிரபல தனியார் ஹோட்டல் உணவு பிரச்சனையில் சிக்கினார். அந்த உணவகத்தில் கெட்டுப்போன உணவுகளை பரிமாறுவதாக பேச்சுக்கள் எழுந்த நிலையில், இர்பானின் ரிவியூவை நம்பி ஹோட்டலுக்கு போனால் அங்கு கெட்டுப்போன இறைச்சிகளை கொடுக்கிறார்கள் என்ற புகார் வர, இணையவாசிகளும் செய்தியாளர்களும் இர்பானை வசைபாடி தீர்த்தனர்.
இது போக, தனது திருமணத்திற்கு பிறகு அமைதியாக இல்லாத இர்பான் துபாய்க்கு சென்று அங்கு தனது குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ அவரை கைது செய்யவேண்டும் என்ற கோஷங்கள் தமிழகத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் வலுக்க தொடங்கியது. பின்பு பல அரசியல் கட்சி தலைவர்களின் தலையிட்டால் அதில் இருந்து தப்பிய இர்பான். இன்று பல பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரையும் நேர்காணல் செய்யும் அளவிற்கு வளர்ந்து உள்ளார்.
இந்த சூழலில், சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையில் ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு உதவ போகிறேன் என தனது மனைவியுடன் உடைகள் வாங்கிக் கொண்டு சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று இருவரும் மக்களுக்கு கொடுத்து வந்தனர். அப்பொழுது இவரும் இவரது மனைவியும் காருக்குள் அமர்ந்து கொண்டே அவர்கள் கொண்டு வந்த உடைகள் மற்றும் உதவிப் பொருட்கள் அடங்கிய, பைகளை அனைவருக்கும் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படி இவர்கள் கொடுக்கும் பொருட்களை வாங்குவதற்காகவும், கைக்கு எட்டிய பொருள் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பதட்டத்தில் காருக்குள் கைகளை விட்டும் மக்கள் வாங்கியுள்ளனர். இதனை பார்த்த இர்பான், டேய் விடுங்கடா, இது என் பொண்டாட்டிடா என கூறி காட்டமாக பேசியிருக்கிறார். மேலும், காருக்குள் கைகளை விடவேண்டாம் எனவும் உதவிப் பொருளை வாங்கும் சிலர் எனது மனைவியை தொட்டு விட்டார்கள் என்றும் அவரது கைகளை பிடித்து இழுத்தார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இர்பான் மற்றும் அவரது மனைவிக்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நீண்ட நாட்களாக இதனை குறித்து பேசாமல் இருந்த இர்பான் தற்பொழுது காணொளி வாயிலாக பேசியுள்ளார். அதில், இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் நான் பேசாமல் இருந்ததற்கு காரணம் பிரச்சனை பூதாகரமாக இருக்கும் வேளையில் நான் பேசினால் அது இன்னும் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்பதால் தான் நான் அமைதியாக இருந்தேன்.
உண்மையில் ரம்ஜான் அன்று நான் செய்தது தவறு. அதனை இப்பொழுது நான் உணர்கிறேன். மேலும், நான் ஒருவருக்கு உதவி செய்ய சென்று இருக்கும் பொழுது அந்த இடத்தில் தவறாக பேச கூடாது. எனக்கு சுத்தமாக தெரியவில்லை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரியவில்லை அந்த சூழலில் நான் அப்படி சொல்லியது உண்மையில் தவறு என்பதை நான் உணர்கிறேன்.
மேலும், அந்த வீடியோவில் அதுங்க கிட்ட கொடு என்றது. எங்கள் வீட்டில் குழந்தைகளை நாங்க உபயோகிக்கும் சொல். ஆதலால் அப்படி பேசிவிட்டேன். கண்டிப்பாக இந்த செயல் பலரது மனதை வேதனை படுத்தி இருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆதலால் இந்த வீடியோ மூலமாக அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
இதையும் படிங்க: சமந்தாவுக்கு இப்படி ஒரு ரசிகரா..?இதெல்லாம் தேவையா..கொஞ்சம் ஓவரா தெரியல..!