சக்க போடு போடும் சூரியின் ’மாமன்'... ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது முழுவிவரம்!!
நடிகர் சூரி நடிப்பில் வெளியான மாமன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
கடந்த 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நடிகர் சூரியின் மாமன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விலங்கு வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கிய இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் பின்வரும் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்: சுவாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இதில் நடித்துள்ளனர். தற்போது வரை ரூ. 40 கோடிக்கும் அதிகமான வசூலை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் வெளியாகி இரண்டு வாரங்களில் ரூ. 40 கோடி வசூலை தாண்டிய இந்த படம், சூரியின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: 'மாமன்' பட வெற்றியால் துள்ளிக் குதிக்கும் சூரி.. எமோஷனலாகப் பதிவிட்டு உருக்கம்.!!
குறிப்பாக குடும்ப பார்வையாளர்களிடம் இந்த படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே மாமன் திரைப்படம் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 9 முதல் 15 வரையிலான வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் பார்க்க முடியாத பார்வையாளர்கள் இந்த படத்தை ஓ.டி.டி.யில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஞ்சமிக்காக தாய்மாமனாக மாறிய சூரி..! காது குத்தி அழகு பார்த்த ருசிகர சம்பவம்..!