×
 

தீபாவளிக்கு சீறிக்கொண்டு வரும் 'பைசன் காளமடான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் தீபாவளி கொண்டாட்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

மிக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான, பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை, என அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவர் விக்ரமின் மகன்,  துருவ் விக்ரமை ஹீரோவாக வைத்து இயக்கி உள்ள திரைப்படம் பைசன் காளமாடன்.

தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும்,  ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான  “பைசன் காளமாடன்” திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அதன்படி இப்படம்,  வரும் 2025 அக்டோபர் 17 அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தற்போது படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையாகும். அதே போல் நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்க...  இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: 70 வருட பழைய பட்டு புடவையில்... வின்டேஜ் லுக்கில் கலக்கும் பூஜா ஹெக்டே!

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரையுலகப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது. மாறுபட்ட கதைக்களத்தில், அழுத்தமான திரைக்கதையுடன், மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பில், புதுமையான அனுபவம் தரும் படைப்பாக இப்படம் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ரசிகர்கள் மனதை சிறகடிக்க வைத்த ஷிவானி நாராயணன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share