×
 

சினிமா வரலாற்றில் எந்த ஹீரோவுக்கும் இல்லாத அடி..! சின்னா பின்னமான சூர்யா..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ரெட்ரோ. இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. தமிழ் நாட்டில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.  இந்த படத்தில் அந்தமானில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ரவுடி கும்பலின் தலைவனுடன் சூர்யாவுக்கு பகை ஏற்படுகிறது. அனைத்து பிரச்சினைகளையும் சூர்யா முறியடித்தாரா? கருவூலப் பொருட்களின் கதி என்ன? பூஜா ஹெக்டே என்ன ஆனார்? என்பது பரபரப்பான மீதி கதை.

இதையும் படிங்க: மவனே... ரெட்ரோ-வை அரை மணி நேரம் தாண்டி பார்த்துட்டா நீ வீரன்டா..! குமுறும் ரசிகர்கள்..!

இந்த நிலையில் இந்த படத்தை எக்ஸ், பேஸ்புக் ஆகிய தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு ரசிகர், சூர்யாவிற்கு படத்தில் பில்ட்-அப் அதிகமாக இருந்ததாக கூறினார். மற்றொரு ரசிகர், சூர்யாவின் கதை முடிஞ்சது, மொக்க படம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதேபோல், என் 250 ரூபாய் போச்சே இது கங்குவா 2 மாறி இருக்கு என்று ஒருவர் கூறியுள்ள நிலையில் மற்றொருவர் மொக்க படம்; வேஸ்ட் ஆப் டைம் என சராமாரியாக அடித்து வருகின்றனர். 

ஏற்கனவே சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. அந்த படத்திற்காக நடிகர் சூர்யா கடுமையாக உழைத்திருந்தாலும் அவருக்கு அதற்கான வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கங்குவா கவிழ்த்துவிட்ட மார்க்கெட்டை ரெட்ரோ தூக்கிவிடும் என எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களின் இந்த மாதிரியான விமர்சனங்கள் நடிகர் சூர்யாவுக்கு பெரிய இடியாக இறங்கியுள்ளது.

இதையும் படிங்க: சூர்யா ரசிகர்களின் மொரட்டு செலிப்ரேஷன்ஸ்... அதிரும் தியேட்டர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share