×
 

முடிவுக்கு வந்தது 12 வருட திருமண வாழ்க்கை..!! ஒரேடியாக பிரிந்த ஜி.வி பிரகாஷ் - சைந்தவி..!

ஜி.வி பிரகாஷ் - சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பிரபல பாடகி சைந்தவி ஆகியோர் விவாகரத்து கோரிய வழக்கில் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அவர்களுக்கு பரஸ்பர விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினர், 11 ஆண்டுகளுக்குப் பிறகு 2024-இல் பிரிவை அறிவித்து, இருவரும் பிரிவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக இருவரும் சேர்ந்து முடிவெடுக்க 6 மாத கால அவகாசம் வழங்கியது. 6 மாத கால அவகாசம் முடிந்த நிலையில், கடந்த 25ம் தேதி நடந்த விசாரணையில் இருவரும் தனிப்பட்ட முறையில் ஆஜராகினர். அப்போது இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருப்பதாகவும், பிள்ளை அன்வியின் நலனைப் பாதுகாக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்தனர்.

இதையும் படிங்க: ஜி.வி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு.. குடும்ப நல நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!

மேலும் நீதிபதி செல்வ சுந்தரி முன்பு குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரிய வழக்கில் செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி இசையமைப்பாளார் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.

இந்தத் தம்பதியினர் பள்ளி நாட்களில் இருந்தே நட்பாக பழகி பின்னர் காதலாக மாறி, இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். ஏ.ஆர். ரஹ்மானின் மருமகன் ஜி.வி.பிரகாஷ், 'அசுரன்', 'சூரரைப்போற்று' போன்ற படங்களுக்கான இசையால் புகழ் பெற்றவர். சைந்தவி, ஜி.வி.பிரகாஷின் இசைக்கு பல பாடல்களுக்கு குரல் கொடுத்தவர்.

அன்வி பிறந்த பிறகு, தனிப்பட்ட காரணங்களால் பிரிவு ஏற்பட்டது. 2024 மே மாதம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "இது நாங்கள் எடுத்த சிறந்த முடிவு" என்று கூறினர். சைந்தவி, "வெளிப்புற சக்திகளால் அல்ல, நாங்கள் சிறந்த நண்பர்கள்" என விளக்கினார். பிரிவு அறிவிப்புக்குப் பின், நடிகை திவ்யபாரதி உடனான உறவு வதந்திகள் பரவின. 'பேச்சுலர்' படத்தில் இணைந்த பிரகாஷ்-திவ்யபாரதி, 'கிங்ஸ்டன்' படத்திலும் ஒன்றாகினர். திவ்யபாரதி, "நான் நடிகர்களை டேட் செய்ய மாட்டேன், இது தவறான வதந்தி" என மறுத்தார். பிரகாஷ், "எங்களை டிரோல் செய்தவர்களை புறக்கணிக்கலாம்" என பதிலளித்தார்.

ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினர் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பிரிந்தாலும், அவர்களின் இசை பயணம் என்றென்றும் தொடரும்.

இதையும் படிங்க: ஜி.வி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு.. குடும்ப நல நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share