×
 

#BREAKING: ஜனநாயகன் படக்குழு தலையில் இடி... சென்சாரில் தனி நீதிபதி உத்தரவு ரத்து..! ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

ஜனநாயகன் படத்திற்கு உடனே தணிக்கை சான்று வழங்கும் தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படம் விஜய்யின் கடைசி திரைப்படமாகக் கருதப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் செய்ததால், படத்தின் வெளியீடு தேதி தள்ளிவைக்கப்பட்டது. டிசம்பர் 18, 2025 அன்று தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

ஆய்வுக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கலாம் என பரிந்துரைத்தாலும், சில உறுப்பினர்களின் ஆட்சேபனை காரணமாக மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதனால், ஜனவரி 9, 2026 அன்று திட்டமிடப்பட்ட வெளியீடு சாத்தியமாகவில்லை. படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. தனி நீதிபதி யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

ஆனால், சிபிஎஃப்சி மேல்முறையீடு செய்ததால், தலைமை நீதிபதி அமர்வு அந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தியது. உச்ச நீதிமன்றத்தை நாடியும் தீர்வு எட்டப்படவில்லை. உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுவை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து தணிக்கை வாரியம் கேவியட் மனுவை தாக்கல் செய்து இருந்தது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கும் வழக்கின் தீர்ப்பு வெளியானது.

இதையும் படிங்க: மலேசியாவில் ஸ்தம்பித்த சாலைகள்..!! 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவால் ரசிகர்கள் திருவிழா..!!

ஜனநாயகனுக்கு உடனே சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை மீண்டும் தனி நீதிபதியின் அமர்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முறையான வாய்ப்பு வழங்கி தனி நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது

இதையும் படிங்க: 2026ல் விஜய் ஜெயிக்க மாட்டார்.. நவ.-ல் சினிமாவுக்கு வந்து விடுவார்..! சவால் விட்ட நடிகையால் சர்ச்சை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share