×
 

ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு... ரசிகர்கள் செம்ம குஷி...!

ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் தளபதி என்று அழைக்கப்படும் விஜய், தனது நீண்டகால திரை வாழ்க்கையை ஒரு அரசியல் பயணத்தால் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தனது கடைசி படமாக ஜனநாயகன் படத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்தப் படம் வெறும் ஒரு சினிமாவாக மட்டுமல்ல, விஜயின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையின் ஒரு முக்கியமான திருப்புமுனையாகத் திகழ்கிறது. 2024 ஏப்ரல் மாதம் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது நடிப்பு வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தார்.

இந்தப் பின்னணியில் ஜனநாயகன் படம் அவரது ரசிகர்களுக்கு ஒரு உணர்ச்சிமிக்க விடை சொல்லாக மாறியுள்ளது. ஜனநாயகன் படம், தளபதி விஜயின் 69வது நடிப்பு படமாக 2024 செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இயக்குநர் எச். வினோத் இதை எழுதி இயக்குகிறார்.

அதேசமயம் கேவி.என். நாராயணாவின் கேவி.என். புரோடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. விஜயின் பிறந்தநாளான 2025 ஜூன் 22 அன்று படத்தின் முதல் டீசர் வெளியானது. இந்த படம் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனநாயகன்படத்தில் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: தேவதையா.. இல்ல அழகு சிலையா..! வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கிளாமரில் நடிகை அதுல்யா ரவி..!

விஜய்க்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கும் விதமாக போஸ்டர் தயாரிக்கப்பட்டு வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. அரசியலில் களம் இறங்கி உள்ள விஜயின் கடைசி படம் ஜனநாயகன் என்பதால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பிலும் மிகுந்த கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். 

இதையும் படிங்க: இடை அழகில் இளசுகளின் குணங்களை மாற்றிய நடிகை பிரணிதா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share