வந்தா ஒரேடியா வரும்.. இல்லனா வராது... ஒரே நேரத்தில் ரிலீசாக இருக்கும் 10 படங்கள்..!
வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி தொடர்ச்சியாக பத்து திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
காலை எழுந்து சாப்பிட கூட நேரமில்லாமல் வேலை செய்து கொண்டு குடும்பத்தையும் பார்த்து கொண்டு உழைக்கும் மக்கள் ஒரு நாள் லீவு கிடைத்தாலும் அனைவரும் ஏங்குவது பொழுதுபோக்கு என்ற ஒன்று, அதில் முக்கிய இடம் பிடித்து இருப்பது வெள்ளித்திரை சின்னத்திரை. இவை இரண்டும் இல்லை என்றால் ஒருவரும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியாது. ஏனெனில் அனைவரும் பைத்தியமாக மாறாமல் இருக்க காரணம் இந்த பொழுது போக்குதான்.
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஒரே ஆயுதம் திரைத்துறை, பல ஒடுக்கப்பட்ட சமூகம் முதல் மூடநம்பிக்கை வரை அனைத்தையும் மாற்ற உறுதுணையாக இருப்பது இத்திரைப்படங்கள். காலப்போக்கில் படங்கள் கருத்து சொல்வதாக இல்லாமல் முழு பொழுதுபோக்காகவே மாறி உள்ளது. இது ஒருபுறம் வேதனையே அளித்தாலும் சில படங்கள் சமூகத்தை இன்றும் மாற்ற உதவிகரமாகவே இருக்கிறது. இதில் பெரிய ஜாம்பவான்கள்களின் படங்கள் வெளியே வர எடுத்தும் காலத்தை விட சிறிய முதலீட்டு படங்கள் இன்றும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: இணையத்தைக் கலக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்...
உதாரணத்திற்கு பல பிரச்சனைகளில் சிக்கிய சுந்தர் சி-யின் மதகதராஜா திரைப்படம் 12 வருடம் கழித்து ரிலீஸ் ஆகி வெற்றியை தேடி தந்தது. இப்படி பல படங்கள் வெளியாகாமல் காத்திருப்பு பட்டியலில் உள்ளது. அவைகள் வந்தால் தியேட்டர்கள் தாங்காது. இதில் மொத்த திரையுலகத்தை அதிரவைத்த செய்தி என்றால் விஜய் திரைத்துறையை விட்டு வெளியே சென்றது தான். இதனால் தியேட்டர் ஓனர்கள் கவலையில் இருந்த நிலையில் தற்பொழுது ஒரே நாளில் ஒரே நேரத்தில் பத்து படங்கள் வெளியாக உள்ளது.
பிப்ரவரி 21ம் நாளன்று பத்து திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் டிராகன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், பிறந்தநாள் வாழ்த்துக்கள் போன்ற பல முக்கிய கதாநாயகர்கள் நடித்திருக்கும் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. மக்களால் பெரிதும் வரவேற்கத்தக்க படம் என்றால் AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம் தயாரிப்பில் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான், பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் இணைப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படம். படம் வெளிவருவதற்கு முன்பே பல விமர்சனங்களை பெற்று இருந்தாலும் இப்படம் எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ளது.
இரண்டாவதாக வண்டர்பார் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்.கே. புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் ரெட் ஜெயிட் மூவிஸால் வெளியிடப்படும் திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இதில் பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், ஆர்.சரத்குமார், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன் மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஆரம்பத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவதாக இருந்த நிலையில் அதனை தனுஷ் வாங்கி, ஸ்கிரிப்ட்டில் பல மாற்றங்கள் செய்து இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக சிலேட் பென்சில் ஸ்டோரீஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானி இயக்கத்தில் சமுத்திரக்கனி, தன்ராஜ், ஹரிஷுத்தமன், சுனில், சத்யா, மோக்ஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்களால் உருவாக்கப்பட்ட 'ராமம் ராகவம்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நாளைய மறுநாள் வெளியாக உள்ள திரைப்படத்தை காண ரசிகர்கள் இப்பொழுதே டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரதீப் இயக்குநர் என்பதை அன்றே கணித்த ஆசிரியர்..! இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்திய பதிவு..!