×
 

கட்டுக்கடங்காத கூட்டம்... ‘மீசைய முறுக்கு 2’ நிகழ்ச்சி திடீர் ரத்து! மன்னிப்பு கேட்டார் ஹிப்ஹாப் ஆதி!

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதால் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தியதாக கூறிய ஆதி, அவர்களின் அறிவுறுத்தலுக்கு மதிப்பளித்து அங்கிருந்து சென்றதாக தெரிவித்தார்.

சென்னை பீனிக்ஸ் மாலில் ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால், ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால், போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்று நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மீசைய முறுக்கு 2’ படத்தை முன்னிட்டு சென்னையில் ரசிகர்களை சந்திக்கும் வகையில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று மாலை பீனிக்ஸ் மாலில் நடைபெற இருந்தது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹிப்ஹாப் தமிழா ஆதி உள்ளிட்டோரை காண ரசிகர்கள் மாலை முதலே அங்கு திரளத் தொடங்கினர்.

நேரம் செல்ல செல்ல ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மால் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழலும் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 10 தேசிய விருதுகளை அள்ளிய கோலிவுட்! தமிழ் திரையுலகின் வெற்றிக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!

இதையடுத்து, அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு போலீசார் ஏற்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்று நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதுடன், ரசிகர்களும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவலுடன் வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே, ரசிகர்களிடம் ஹிப்ஹாப் தமிழா ஆதி வீடியோ மூலம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், ரசிகர்களை சந்திப்பதற்காக தானும் மிகவும் ஆவலுடன் காத்திருந்ததாகவும், ஆனால் தவிர்க்க முடியாத பாதுகாப்பு காரணங்களால் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதால் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தியதாக கூறிய ஆதி, அவர்களின் அறிவுறுத்தலுக்கு மதிப்பளித்து அங்கிருந்து சென்றதாக தெரிவித்தார்.

மேலும், நிகழ்ச்சிக்காக நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், மற்றொரு நிகழ்ச்சியில் ரசிகர்களை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஹிப்ஹாப் ஆதியின் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ‘மீசைய முறுக்கு 2’ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட சம்பவம் தற்போது கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!! பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share