#BREAKING: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! நடிகர் தனுஷுக்கு சிறப்பு விருது..!!
72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
72 ஆவது தேசிய திரைப்பட விருதுகளை தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சிறந்த படங்கள், நடிகர், நடிகை, இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புது டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நடைபெறும் செய்திகளால் சந்திப்பில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2024 இந்திய மொழிகளில் வெளியான படங்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
சிறந்த திரைப்பட விமர்சக எழுத்தாளருக்கான தேசிய விருது ஹிந்தியில் சஞ்சீவ் ஸ்ரீ வஸ்தாவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த திரைப்பட புத்தகத்திற்கான விருது மிரர் புத்தகா என்ற கன்னட புத்தகத்திற்காக கெஞ்சகேரு பிரதீப் குமாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த ஆவணப்பட பின்னணி குரல் விருது சௌந்தர்யா ஜெயச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறந்த ஆவணப்பட ஒலி வடிவமைப்புக்காக விருது ப்ளூ என்ற தமிழ் படத்திற்கு ஹரிஹர சுதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆவணப்பட ஒளிப்பதிவாளருக்கான விருது எட்மண்ட் ரான்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருது ஹிந்தியில் ராம் நவமி என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த கலாச்சார படத்திற்கான தேசிய விருது ஹிந்தி மொழியில் வெளியான மெயின் நாடு படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் ஜாலி ட்ரிப்... ரொமான்டிக் மூடில் வி.ஜே.பார்வதி – கம்ருதீன்..! வைரலாகும் வீடியோ.. கடுப்பில் நெட்டிசன்கள்..!
சிறந்த ஆவண குறும்படமாக மராத்தி மொழியில் உருவான ஹம்சாவர் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிக்கலவை சிறப்பு விருது மெய்யழகன் படத்திற்காக சுரேனுக்கு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 சிறப்பு நடிகருக்கான விருது கேப்டன் மில்லர் படத்திற்காக நடிகர் தனுஷுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கிய ராயன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த மலையாள படம் விருது பெமினிச்சி பாத்திமா படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டின் சிறந்த கன்னட படம் விருது மித்யா என்ற படத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த சண்டைக் காட்சி இயக்குனருக்கான விருது மகாராஜா படத்திற்கு அனல் அரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சிறந்த இசைக்கான விருது தமிழில் அமரன் படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அமரன் படத்திற்காக ஜிவி பிரகாஷிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெள்ளை நிற கோட் சூட்டில் செம்ம ஸ்டைலிஷ் லுக்..!! கிளாஸ் மற்றும் கிளாமர் காம்போவில் இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷ்..!
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது புஷ்பா 2 படத்திற்காக தீபலி நூல் மற்றும் சீதல் சர்மாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த எடிட்டிங் விருது அமரன் படத்திற்காக கலைவாணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைக்கதை வசனத்திற்கான விருது லக்கி பாஸ்கர் படத்திற்காக வெங்கி அட்லூரி என்பவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவுக்கான திரைப்பட விருது பிரம்மயுகம் படத்திற்காக ஜலாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருது அமரன் படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான திரைப்பட விருது பிரம்மயுகம் படத்திற்காக நடித்த நடிகர் மம்முட்டிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த பெண் பாடகருக்கான விருது வைக்கம் விஜயலட்சுமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது கார்த்திக் ராயனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.