துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட்..! வேட்டு வைக்கும் மத்திய அரசு... OPS கண்டனம்..!
துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தினார்.
மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட் தேர்வு' ரத்து செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை தமிழக மக்களிடையே வலுப்பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், துணை மருத்துவப் படிப்பிற்கும் 'நீட் தேர்வு கட்டாயம்' என்ற முடிவினை மத்திய அரசு அறிவித்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என முன்னாள் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
வருகின்ற கல்வி ஆண்டு முதல் இரண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளான Bachelor of Physiotherapy and Bachelor of Occupational Therapy ஆகியவற்றில் சேர்ந்து படிக்க நீட் தேர்வு கட்டாயம் என்று பிறப்பித்துள்ள உத்தரவு தமிழ்நாட்டில் உள்ள ஏழையெளிய கிராமப்புற மாணவ மாணவியரை கடுமையாக பாதிக்கும் என்று கூறினார்.
மருத்துவ துணைப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நீட் தேர்வு என்பது கிராமப் புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும் உள்ள மாணவ, மாணவியருக்கு எதிரான செயல் என்றும் மத்திய அரசின் இந்த முடிவு தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவ மாணவியரின் உயர் கல்விக்கு பயனளிக்காது என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவில் ஐக்கியமான வைத்திலிங்கம்..! ஒரத்தநாடு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!
ஏற்கெனவே மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஏழையெளிய மாணவ மாணவியர் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர கடன் வாங்கி அதிக கட்டணம் செலுத்தி வருகின்ற நிலையில், இந்தப் பயிற்சி வகுப்புகளில் சேர வசதி இல்லாதவர்கள் மருத்துவத் துணைப் படிப்புகளை பயின்று வந்துள்ளதாகவும், இந்தப் படிப்பிற்கும் வேட்டு வைக்கும் வகையில் மத்திய அரசின் தற்போதைய உத்தரவு அமைந்துள்ளது என்றும் கூறினார். தமிழக மக்களின் வலியுறுத்தலையும், ஏழையெளிய கிராமப்புற மக்களின் நலனையும் கருத்தில், மருத்துவ துணைப் படிப்புகளுக்கான நீட் தேர்வினை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவில் இணைந்தது ஏன்? OPS இதை செய்யவில்லை..! வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி..!