×
 

பிரபல நடிகர், பாடிபில்டர் வரிந்தர் சிங் குமான் மரணம்..!! நெஞ்சை உறைய வைக்கும் காரணம்..!!

பஞ்சாபை சேர்ந்த நடிகர் வரிந்தர் சிங் குமான் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 42.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் மற்றும் பாடிபில்டருமான வரிந்தர் சிங் குமான் (42), திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பஞ்சாப் சினிமா மற்றும் உடற்பயிற்சி உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமிர்த்சரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சையின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இது பஞ்சாப் சினிமா துறையின் இரண்டாவது பெரும் இழப்பாக அமைந்துள்ளது, ஏனெனில் நேற்று பஞ்சாப் பாடகர் ராஜ்விர் ஜவாண்டாவும் உயிரிழந்தார்.

குர்தாஸ்பூரில் பிறந்த வரிந்தர் சிங் குமான், 6 அடி 3 அங்குல உயரமும், 120 கிலோ எடையுடைய உடல் அமைப்பால் உலக அளவில் பிரபலமானார். அவர் உலகின் முதல் சைவ உணவு உட்கொள்ளும் தொழில்முறை உடற்பயிற்சி வீரராக (வெஜிடேரியன் புரோஃபெஷனல் பாடிபில்டர்) அறியப்பட்டார். 2009ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்று, மிஸ்டர் ஆசியா போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றவர். 2013இல் ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் ஷ்வார்செனெகர் அவரை ஆசியாவில் தனது ஃபிட்னஸ் பிராண்ட்டைச் சேர்ப்பிக்க அழைத்தார். இந்தியாவின் 'ஹீ-மேன்' என்று அழைக்கப்பட்ட அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.

இதையும் படிங்க: ச்ச.. என் பொண்ணுகிட்ட போய் இத கேட்டாங்க..!! ஷாக் நியூஸ் சொன்ன நடிகர் அக்ஷய் குமார்..!!

நடிப்பு துறையில் 2012இல் வெளியான 'கபடி ஒன்ஸ் அகெயின்' படத்தின் மூலம் பஞ்சாப் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் 2014இல் 'ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சண்டர்பன்ஸ்' படத்தால் போலிவுட்டில் தடம் பதித்தார். 2019இல் 'மர்ஜாவான்' படத்தில் நடித்து, 2023இல் சல்மான் கான் நடித்த 'டைகர் 3' படத்தில் பாகிஸ்தான் சிறை காவலர் ஷகீல் என்ற கதாபாத்திரத்தில் திகழ்ந்தார். அவரது உடல் அமைப்பும், திரை அனுபவமும் ரசிகர்களை கவர்ந்தன. மேலும் அவர் 2027 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது மறைவு செய்தியை அறிந்ததும் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தனது எக்ஸ் பக்கத்தில், பஞ்சாபின் பிரபல உடற்பயிற்சி வீரரும் நடிகருமான வரிந்தர் சிங் குமானின் திடீர் மறைவு எனது இதயத்தை உடைத்துவிட்டது. அவரது கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் திறமை பஞ்சாப் பெயரை உலகம் முழுவதும் ஒளிரச் செய்தது. அவரது ஆன்மா சாந்தி அடைந்து, குடும்பத்துக்கு இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையை இறைவன் அளிக்கட்டும் என்று தெரிவித்தார்.

வரிந்தர் சிங் குமானின் மரணம் பாடிபில்டர்கள் மத்தியில் மாரடைப்பு அபாயம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. 'உடல் தகுதியுடையவர்களுக்கும் ஏன் மாரடைப்பு வருகிறது?' என்ற கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர். மேலும் இவரது மறைவிற்கு பாடகர் மன்கிர்த் அவுலாக் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் அமிர்தசரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம், இளம் வயதினருக்கு உடல் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ச்ச.. என் பொண்ணுகிட்ட போய் இத கேட்டாங்க..!! ஷாக் நியூஸ் சொன்ன நடிகர் அக்ஷய் குமார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share