ரூ.5 க்கு பரோட்டா விற்பனை..! ரசிகருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டிய ரஜினி..!
மதுரையில் 5 ரூபாய்க்கு பரோட்டா விற்பனை செய்யும் தனது ரசிகரை அழைத்து ரஜினிகாந்த் பாராட்டினார்.
ரஜினி ரசிகர்களின் அன்பு வெறும் திரைப்பட ரசனையில் மட்டும் நின்றுவிடுவதில்லை. அது வாழ்க்கையின் பல அம்சங்களில் பிரதிபலிக்கிறது. ரஜினி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டும் பணிவு, எளிமை, மனிதநேயம் ஆகியவை ரசிகர்களை மேலும் ஆழமாக இணைக்கின்றன.
பெரிய ஸ்டார் ஆன பின்னரும் அவர் ரசிகர்களை சந்திக்கும்போது அவர்களுடன் அன்போடு பழகுவது எல்லாம் அவரை ஒரு கடவுள் போன்ற நிலைக்கு உயர்த்தியுள்ளன. பல ரசிகர்கள் தங்கள் வீடுகளில் ரஜினிக்கு கோயில் கட்டி, பால் ஊற்றி, பூ மாலை சூட்டி வழிபடுகிறார்கள். அவரது பிறந்தநாள், பட வெளியீடு நாட்களில் திரையரங்குகள் முன் பட்டாசு, பால் காய்ச்சுதல், அன்னதானம் போன்றவை வழக்கமாகிவிட்டன.
ரஜினி ரசிகர்களின் அன்பு ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு பரவி வருகிறது. 70கள், 80கள் காலகட்டத்தில் இளைஞர்களாக ரஜினியை ரசித்தவர்கள் இன்று தங்கள் குழந்தைகளுக்கும் அதே உணர்வை ஊட்டுகிறார்கள். இந்த நிலையில், தனது ரசிகர் ஒருவரை அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார். மதுரையில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான அல்போன்ஸ் சம்பவர் ஐந்து ரூபாய்க்கு பரோட்டா விற்பனை செய்து வருகிறார்.
இதையும் படிங்க: பொங்கல் விழா... சீறும் காளை... மதுரை ஜல்லிக்கட்டு போட்டி தேதி அட்டவணை வெளியீடு...!
குறைந்த விலையில் உணவு விற்பனை செய்து வரும் அல்போன்ஸ் குறைத்து தகவல் அறிந்ததும் ரஜினிகாந்த் நேரில் அழைத்து அவரை பாராட்டினார். அவரை நேரில் பார்க்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த் குடும்பத்துடன் வருமாறு அழைத்துள்ளார். ரஜினிகாந்த் இல்லத்திற்கு வந்த அல்போன்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அல்போன்ஸுக்கு தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டினார்.
இதையும் படிங்க: யாசகம் கேட்டதால் எச்சரிக்கை..! போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த திருநங்கை..! பரபரப்பு..!