யாசகம் கேட்டதால் எச்சரிக்கை..! போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த திருநங்கை..! பரபரப்பு..!
ஸ்ரீவில்லிபுத்தூரில் யாசகம் கேட்கக் கூடாது என போலீசார் எச்சரித்ததால் திருநங்கை தீ குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாலான பேருந்து நிலையங்களில், குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை போன்ற இடங்களில், திருநங்கைகள் குழுக்களாக அல்லது தனித்தனியாக பயணிகளை அணுகி பணம் கேட்பது வழக்கமாகிவிட்டது. சில திருநங்கைகள் பயணிகளின் கைகளைப் பிடித்து, தோளைத் தொட்டு, சில சமயங்களில் வழி மறித்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பயணிகள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் கொண்ட குடும்பங்கள், முதியோர் ஆகியோர் மிகுந்த அசௌகரியத்திற்கு ஆளாகின்றனர்.
பயணத்திற்கு அவசரமாக இருப்பவர்கள் தங்கள் பேருந்தை தவறவிடும் அபாயத்தையும் எதிர்கொள்கின்றனர்.இரவு நேரங்களில் இந்த நடைமுறை இன்னும் தீவிரமடைகிறது. ஒரு சில திருநங்கையர்கள் திட்டுவது, சாபம் விடுவது போன்ற செயல்களிலும் பணம் கொடுக்காத பட்சத்தில் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் உழைச்சலுக்கு ஆளாகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே மணிக்கூண்டு பகுதியில் திருநங்கைகள் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறைக்கு பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் பெண் எஸ்.ஐ தலைமையில் அங்கு சென்ற போலீஸார் திருநங்கைகள் முத்தாரி, ஷர்மி ஆகியோரை எச்சரித்து அனுப்பியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட்..! வேட்டு வைக்கும் மத்திய அரசு... OPS கண்டனம்..!
திருநங்கைகள் பணம் பெறுவதாக போலீசாரிடம் மக்கள் குற்றச்சாட்டு முன் வைத்த நிலையில் மக்களிடம் யாசகம் பெறக்கூடாது என திருநங்கைகளை போலீசார் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசாரின் எச்சரிக்கையை கண்டித்து காவல் நிலையம் முன்பு முத்தரசி என்ற திருநங்கை தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காயமடைந்த முத்தரசியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை அச்சுறுத்தி யாசகம் கேட்க கூடாது என்று போலீசார் எச்சரித்ததால் திருநங்கை தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கணக்கு போட்டு காத்திருக்கும் விஜய்!! தைலாபுரம் - தேமுதிக நிலைப்பாடு என்ன? ராமதாஸ் - பிரேமலதா யாருடன் கூட்டணி?