×
 

ரோபோ சங்கர் மரணம்; இறுதிச்சடங்கு குறித்து குடும்பத்தினர் வெளியிட்ட அதி முக்கிய அறிவிப்பு...!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் மரணமடைந்த நிலையில் அவரது இறுதிச்சடங்கு எப்போது என்ற அறிவிப்பை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். 

மதுரையில் பிறந்த நடிகர் ரோபா சங்கர், சினிமா ஆசையின் காரணமாக சென்னைக்கு வந்து பல தொலைக்காட்சிக்கு மிமிக்ரி கலைஞராக பணியாற்றினார். அதன் மூலமாக 2007ஆம் ஆண்டு ரவி மோகனின் நடிப்பில் வெளியான தீபாவளி திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘மாரி’,‘புலி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் அதேபோல அஜித் நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் பலவற்றிலும்  நடித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்தார். திரைப்படங்களை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராகவும், பங்கேற்பாளராகவும் அசத்தி வந்தார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை ஏற்பட்டதால் கடுமையாக உடல் எடை குறைந்து காணப்பட்டார் ரோபோ சங்கர். பின்னர் மெல்ல தேறி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். கடந்த புதன் கிழமை படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்றிருந்த ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை அருகே இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,  அதன் பிறகு பெருங்குடியில் இருக்கக்கூடிய ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் ஆதரவுடன் தீவிர சிகிச்சை பிரிவில் ரோபோ சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 8 மணி அளவில் அவர் உயிரிழந்தார். 

தற்போது அவரது உடலானது வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முதல் ஆளாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நடிகர்கள் தனுஷ், விஜய் ஆண்டனி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 47 வயதான ரோபோ சங்கரின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.. அதிர்ச்சியில் சினிமாத் துறையினர்..!!

ரோபோ சங்கர் உடல்சென்னை வளசரவாக்கத்தில் இன்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த செய்தி அவரது ரசிகர்களையும், திரையுலகினரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: ரெடியா மக்களே.. நாளை ஒரே நாளில் ரிலீசாகும் 4 படங்கள்.. எதுக்கு போகப்போறீங்க..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share