ரோபோ ஷங்கர் குடும்பம் களைகட்டிய கொண்டாட்டம்! இந்திரஜா பகிர்ந்த போட்டோஸ்!
ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா சமூக வலைதளத்தில், பகிர்ந்துள்ள புகைப்படங்களுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ ஷங்கர்.
காமெடி நடிகராக இருந்து அம்பி திரைப்படம் மூலம் ஹீரோவாகவும் மாறியுள்ளார்.
இவரை தொடர்ந்து, வெள்ளித்திரையில் நடிகையாக மாறியவர் இவரின் மகள் இந்திரஜா.
அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த பாண்டியம்மா கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
குறிப்பாக விஜய் சொல்லும் குண்டம்மா டயலாக் ஹை லைட்டாக பார்க்கப்பட்டது.
இந்த படத்தை தொடர்ந்து, விருமன் படத்திலும் நடித்திருந்தார்.
கடைசியாக எஸ்ஏசி நடிப்பில் வெளியான படத்தில் நடித்திருந்தார்.
இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த கையேடு, குடும்ப உறவினரான கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: ப்பா.. 42 வயதிலும் குறையாத கவர்ச்சி! ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!
கார்த்திக் - இந்திரஜா காதலித்த நிலையில், பின்னர் பெற்றோரே இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
திருமணம் ஆன 3 மாதத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார்.
இதை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் இந்திரஜாவுக்கு குழந்தை பிறந்தது.
இந்திரஜாவின் மகனுக்கு நட்சத்திரன் என பெயர் சூட்டினார் உலக நாயகன் கமல்ஹாசன்.
தற்போது இந்திரஜாவுக்கு குழந்தை பிறந்து 100 நாட்கள் ஆனதை தொடர்ந்து, கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்களை தற்போது இந்திரஜா வெளியிட வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த கொண்டாட்டத்தில் ரோபோ ஷங்கருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்
இதையும் படிங்க: சேலையை சரிய விட்டு... பின்னழகை தூக்கலாக காட்டி.. கவர்ச்சியில் கிறங்கடிக்கும் பிரணீதா!