×
 

3BHK பட வெற்றி விழாவில் சுவாரசியம்.. இசையமைப்பாளருக்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த சரத்குமார்..!

3BHK பட இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத்திற்கு விலையுயர்ந்த வாட்சை பரிசாக வழங்கினார் நடிகர் சரத்குமார்.

8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், சைத்ரா, மீதா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் ஒரு நடுத்தர குடும்பத்தில் வீடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை காண்பிக்கும் வகையில் அமைந்துள்ள திரைப்படம் தான் "3BHK". இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரித்த இந்தப் படத்திற்கு, பின்னணி பாடகி பாம்பே ஜெயஶ்ரீயின் மகனான இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் மென்மையான இசையைக் கொடுத்திருக்கிறார்.

கடந்த 4ம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வீடு கட்டுவதற்காக போராடி தோற்றுப்போகும் அப்பா சரத்குமார், அப்பா கனவை நினைவாக்க போராடும் சித்தார்த், ஆனால் அவருக்கு படிப்பு கைகொடுக்காமல் போகவே மிகவும் போராடி முயற்சி செய்து கடைசியில் வீடு வாங்குவாரா..? மாட்டாரா..? என்பதே இப்படத்தின் கதையாக உள்ளது.

இதையும் படிங்க: 3BHK படத்தை பார்த்து அழுதுட்டேன்..! கனவு நினைவாகும் தருணம் இப்படித்தான் இருக்கும் - ஸ்டாலின் பாலுச்சாமி பேட்டி..!

மேலும் வாழ்க்கையில் தோற்றுப் போகும் நடிகர் சரத்குமார் தனது கனவை தனது மகனான சித்தார்த்தின் மீது வைக்கிறார். ஆனால் சித்தார்த் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய சாமானிய இளைஞனின் கண்ணீரை பிரதிபலிக்கும் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. மேலும் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தான் மிகவும் அல்டிமேட்டாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் சரத்குமார் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் சரத்குமார், தனது மகனாக நடித்த நடிகர் சித்தார்த்தை நகைச்சுவையாகக் கலாய்த்தார். சல்மான்கான் போல்  கண்ணாடியை சட்டையின் பின்னால் வைத்துக் கொண்டு மேடைக்கு வரக்கூடாது என்று கூறி, "சாரி சொல்லி அதை முன்னால் எடுங்கள்" என அனைவர் முன்னிலையிலும் வேடிக்கையாகச் சொன்னது, அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது. 

மேலும் இந்தப் படத்திற்கு அம்ரித் ராம்நாத்தோட இசை உயிர் கொடுத்திருக்கிறது. அவர் என்னுடைய வாட்ச் பிடித்திருக்கிறது என்று சொன்னார், அதனால் அதை அவருக்கே பரிசாக கொடுக்கிறேன் எனக்கூறி, மேடையிலேயே அந்த வாட்சை அம்ரித்திற்கு கொடுத்த சரத்குமார், சுப்மன் கில் போல் அம்ரித், நல்ல இன்னிங்ஸ் ஆட வேண்டும் என கூறினார். தேவயாணி இவ்வளவு இனிமையாக பேசி நான் பார்த்ததே இல்லை. எப்போதுமே அமைதியாகத்தான் இருப்பாங்க. ஆனால், அவங்க டைரக்டரா மாறின பிறகு இவ்வளவு பேச ஆரம்பிச்சிருக்காங்க" என்று சரத்குமார் கூறினார்.

சரத்குமார் அம்ரித்திற்கு வாட்ச் கொடுத்த நிலையில், சித்தார்த் சரத்குமாரிடம், அம்ரித் வாட்ச் கேட்டான் அதனால் அவனுக்கு அதை கொடுத்தீர்கள். எனக்கு உங்க வீடு மிகவும் பிடிக்கும், சைத்ராவிற்கு உங்கள் காரை மிகவும் பிடிக்கும், அதனால் அடுத்த தடவை எனக்கு அதை பரிசாக கொடுங்கள்" என கலாய்த்து பேசினார்.

இதையும் படிங்க: என்னா படம்.. எப்படிப்பட்ட படைப்பு..! '3BHK, பறந்து போ' படத்திற்கு நடிகர் சூரியின் கமெண்ட்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share