நடித்த படம் கம்மிதான்.. ஆனா சேர்த்த புகழ் அதிகம்..! திறமைக்கு எண்டே கிடையாது - நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி..!
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, திறமைக்கு எண்டே கிடையாது என வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
இந்திய சினிமாவில் சில நடிகைகள் குறுகிய காலத்திலேயே அதிக படங்களில் நடித்து பரபரப்பாக பேசப்படுவார்கள். இன்னொரு வகை நடிகைகள், குறைவான படங்களிலேயே தங்களுக்கான தனி இடத்தை உறுதியாகப் பிடித்து, ரசிகர்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவராக தற்போது பார்க்கப்படுபவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. ‘கே.ஜி.எப்’ போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த ஸ்ரீநிதி ஷெட்டி, சமீபத்தில் தனது படத் தேர்வுகள் மற்றும் இடைவெளி குறித்து பேசிய கருத்துகள், சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.
கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீநிதி ஷெட்டி, முதலில் மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கினார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சூப்பர்நேஷனல் போட்டியில் உலக அழகிப் பட்டம் வென்றதன் மூலம், அவர் தேசிய அளவில் கவனம் பெற்றார். அதன் பிறகே சினிமா வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. பல மொழி திரைப்படத் தயாரிப்பாளர்களின் கவனத்தையும் ஈர்த்த ஸ்ரீநிதி, தனது முதல் படமாகவே பிரம்மாண்டமான ‘கே.ஜி.எப்: சாப்டர் 1’ படத்தில் நடித்து, இந்திய சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். இப்படி இருக்க யாஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எப்’ திரைப்படத்தில் ரீனா தேசாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி, குறைந்த காட்சிகளிலேயே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். அந்த படம் இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெரும் வசூல் சாதனை படைத்தது. இதன் தொடர்ச்சியாக ‘கே.ஜி.எப்: சாப்டர் 2’ படத்திலும் அவர் நடித்தார்.
இதையும் படிங்க: 2026ல் விஜய் ஜெயிக்க மாட்டார்.. நவ.-ல் சினிமாவுக்கு வந்து விடுவார்..! சவால் விட்ட நடிகையால் சர்ச்சை..!
இந்த இரண்டு படங்களுமே அவரது திரைப்பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்தன. மேலும் ‘கே.ஜி.எப்’ வெற்றிக்குப் பிறகு, ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பல மொழிகளில் வாய்ப்புகள் வந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும், அவர் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளாமல், தேர்ந்தெடுத்து மட்டுமே நடித்தார். தமிழில், நடிகர் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை என்றாலும், ஸ்ரீநிதி ஷெட்டியின் நடிப்பு கவனிக்கப்பட்டது. தொடர்ந்து, தெலுங்கில் நடிகர் நானியுடன் ‘ஹிட்-3’ படத்தில் நடித்தார். இந்த படமும், அவருக்கு தெலுங்கு ரசிகர்களிடையே ஒரு அடையாளத்தை உருவாக்க உதவியது. இந்த சூழலில் சமீபத்தில், அவர் ‘தெலுசு கதா’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மூலம், வணிக சினிமாவைத் தாண்டி, கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் அவர் ஆர்வம் காட்டி வருவது தெரிந்தது.
இருப்பினும், அவரது திரைப்பயணத்தை கவனிக்கும் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள், “சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும், ஏன் இவ்வளவு குறைவான படங்களில் மட்டும் நடித்துள்ளார்?” என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீநிதி ஷெட்டியிடம் இதே கேள்வி நேரடியாக கேட்கப்பட்டது. “நீங்கள் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், குறைவான படங்களே நடித்துள்ளீர்கள். ஏன் இந்த இடைவெளி?” என்ற கேள்விக்கு, அவர் அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மிகவும் நிதானமாகவும், தன்னம்பிக்கையுடனும் அவர் பேசிய அந்த பதில், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் பேசுகையில், “உண்மை தான். கடந்த 10 ஆண்டுகளில் குறைவான படங்களே நடித்திருக்கிறேன். ஆனால், அதே நேரத்தில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, படங்களின் எண்ணிக்கை மட்டும் திறமையை பளிச்சிட வைத்திடாது. திறமைதான் நம்மை வெளிக்கொண்டு வரும்” என்று கூறினார். மேலும், “நான் செய்யும் ஒவ்வொரு கதாபாத்திரமும் என்னை திருப்திப்படுத்த வேண்டும். அதற்காகவே நான் அதிக படங்களில் நடிக்காமல், சரியான கதைகளுக்காக காத்திருக்கிறேன். அந்த வகையில், நான் பளிச்சிட்டு வருவதாகவே உணருகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
இப்படியான ஸ்ரீநிதி ஷெட்டியின் இந்த பேச்சு, இன்றைய சினிமா சூழலில் ஒரு முக்கியமான விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. அதிக படங்களில் நடித்தால் தான் ஒரு நடிகர் அல்லது நடிகையின் மதிப்பு உயரும் என்ற எண்ணம், பலரிடமும் இருந்து வருகிறது. ஆனால், குறைவான படங்களிலேயே வலுவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஸ்ரீநிதி ஷெட்டி ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் சினிமா வட்டாரங்களும், அவரது இந்த அணுகுமுறையை பாராட்டி வருகின்றன. குறிப்பாக, பல நடிகைகள் தொடர்ந்து படங்களில் நடித்தாலும், நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள் இல்லாமல் மறைந்து போகும் சூழலில், ஸ்ரீநிதி ஷெட்டி போன்றவர்கள் தேர்ந்தெடுத்த பயணம் தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது.
'கே.ஜி.எப்’ போன்ற ஒரு பெரிய படத்தில் அறிமுகமாகி, அதன் பிறகு அதற்கேற்ற கதைகளை தேர்வு செய்வது எளிதான விஷயம் அல்ல என்றும், அது ஒரு நடிகையின் தன்னம்பிக்கையையும், தெளிவான சிந்தனையையும் காட்டுகிறது என்றும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே எதிர்காலத்தைப் பொறுத்தவரை, ஸ்ரீநிதி ஷெட்டி மீண்டும் சில முக்கிய படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சில கதைகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வணிக சினிமாவுக்கும், கதையம்சம் கொண்ட படங்களுக்கும் சமநிலை வைத்து தனது பயணத்தை தொடர வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி கூறிய இந்த கருத்துகள், அவரது தனிப்பட்ட சினிமா தத்துவத்தை வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது. எண்ணிக்கையை விட தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவரது அணுகுமுறை, அவரை மற்ற நடிகைகளிலிருந்து வேறுபடுத்துகிறது. குறைவான படங்களிலேயே தன்னை பளிச்சிட வைத்துள்ளேன் என்ற அவரது நம்பிக்கை, வருங்காலத்தில் மேலும் வலுவான கதாபாத்திரங்களாக வெளிப்படும் என்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: கெஞ்சிய நடிகை மீரா மிதுன்.. கண்டுக்காத சென்னை ஐகோர்ட்..!! SC/ST வழக்கு ரத்து மனு தள்ளுபடி..!!