வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
சினிமா

“தலைவன் தலைவி” ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா..? அசத்தலாக வெளியிட்ட படக்குழு..!

"தலைவன் தலைவி" படம் வரும் ஜூலை 25ம் தேதி வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

பல வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான "தலைவன் தலைவி" படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியும், இயக்குநர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு, செம்பியன் வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுகுமார் பணிபுரிந்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘தலைவன் தலைவி’ டைட்டில் டீசரில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் கணவன் – மனைவியாக கொத்து பரோட்டா போட்டுக் கொண்டே வார்த்தை யுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வசனங்களும், பெர்ஃபார்மன்ஸும் அழுத்தமாகவும் ஜாலியாகவும் இருக்கின்றன. முடிவில், அவர்கள் இருவரைப் பற்றியும் யோகி பாபு தரும் ஒன்லைன் விளக்கமும் வேற ரகம். அத்துடன் ஆக்‌ஷன் சம்பவங்களும் உண்டு என்பதை துப்பாக்கிச் சத்தம் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, சந்தோஷ் நாராயணின் இசை பட்டையைக் கிளப்பியிருக்கிறது. 

இதையும் படிங்க: மல்லிகை பூவுடன் வாசமாக வந்த நடிகை கீர்த்தி பாண்டியன்..! இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு அசத்தல்..!

குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.  'தலைவன் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து சுப்லாஷினியுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில், "தலைவன் தலைவி" படத்தின் ரிலீஸ் தேதி நாளை காலை 11.11க்கு வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி இந்த படம் வரும் ஜூலை மாதம் 25ம் தேதி வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில், Welcome to Hotel Raghavarthini என்று பதிவிட்டு, படத்திற்கான தேதி ரிலீஸ் டீசரை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர். 

ஏற்கனவே 19(1)(ஏ) என்ற மலையாள படத்தில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகை மாளவிகா மோகனின் கலெக்ஷனில் இதுவும் ஒன்னா..! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी