நடிகனாக லாயக்கு இல்லை! எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா? யோகிபாபுவை கிழித்தெடுத்த தயாரிப்பாளர்..!
கஜானா படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் யோகி பாபு கலந்துகொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு யோகி பாபு விளக்கம் கொடுத்து பதிலடி கொடுத்துள்ளார்.
ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Square Studios) சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் திரைப்படம் கஜானா. இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஒருவராக தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ராஜா கலந்து கொண்டார். அவர் மேடையில் பேசியவை தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. தயாரிப்பாளர் ராஜா, ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா என்பது பிறக்கும் குழந்தையை போன்று. அந்த குழந்தையை வளர்த்து எடுக்க வேண்டிய பொறுப்பு அந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இருக்கிறது என கூறினார். ஆனால் பணம் கொடுத்தால் தான் யோகி பாபு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும், என்று கூறுகிறார். இது தவறானது, இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு சீறிக்கொண்டு வரும் 'பைசன் காளமடான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்தக் கூட்டத்தில் யோகி பாபு இருக்கிறாரா? என எல்லோரும் கேட்கிறார்கள். நான் இங்கு அவர் வரவில்லை என சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. நேரில் வந்தால் தான் வந்திருக்கிறார் என பார்க்க முடியும். ஒரு படத்தின் வெளியீட்டுக்கு வரவில்லை என்றால், நீ நடிகனாக இருக்கவே தகுதியற்றவன். இதை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு காலம் கூடிய விரைவில் பதில் சொல்லும். ஒரு ரூ.7 லட்சம் கொடுக்கவில்லை என்றால் அந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரமாட்டார் போல. இது எவ்வளவு பெரிய கேவலமான விஷயம் என கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குநரும், தயாரிப்பாளருமான பிரபதீஸ் சாம்ஸ், யோகி பாபு எங்கள் படத்தின் ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். படப்பிடிப்பு தேதி கொடுப்பதில் இருந்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட போஸ்டர்கள் வெளியிடுவது என அனைத்திற்கும் அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடக்கும் தேதியன்று தவிர்க்க முடியாத சில பணிகள் அவருக்கு இருப்பதால், பங்கேற்க இயலாது, என்று முன்கூட்டியே தெரிவித்து விட்டார். நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துங்கள், என்று எங்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார் என கூறினார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ராஜாவின் பேச்சுக்கு யோகிபாபு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில், தயாரிப்பாளர் ராஜா யார் என்றே தெரியாது என ஒரே போடாக போட்டுள்ளனர். மேலும் பல வருடங்களாக கஜானா படம் எடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கின்றனர். இப்போது யோகி பாபு பிஸியாக இருப்பதாகவும், அதனால் தான் பட புரோமோஷன் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளனர். மேலும், யோகி பாபு பல படங்களி்ல் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தற்போது இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் மற்ற தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். அடுத்தடுத்த படங்களில் நடித்து கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நண்பேன்டா.. சிம்பு - சந்தானம் இணையும் STR 49 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!