×
 

Anna Serial: வருத்தத்தில் இசக்கி.. குமுறலை கொட்டும் சண்முகம் - அண்ணா சீரியல் அப்டேட்!

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி சண்முகத்தை மீறி சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி சென்ற நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சௌந்தரபாண்டி, பாக்கியம் ஆகியோர் இசக்கியை தங்களது வீட்டிற்கு அழைத்து கொண்டு சந்தோசமாக வருகின்றனர். வீட்டிற்கு வந்த இசக்கி அண்ணன் சண்முகத்தை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாள். இன்னொரு பக்கம் சண்முகம் இசக்கி தன் பேச்சை மீறி போனதால் வருத்தப்படுகிறான். 

ஆனால் அதை எதையும் வெளியே காட்டி கொள்ளாமல் சாப்பிட வந்து உட்காருகிறான். வீட்டில் எல்லாரும் சாப்பிடாமல் இருக்க சண்முகம் சாப்பாடு போட சொல்கிறான். 

அவ போனால் எனக்கு என்ன? நான் சாப்பிடாமல் இருக்கணுமா? கறியை அள்ளிப்போட்டு சாப்பாடு போடு என சத்தம் போடுகிறான்.  அவனுக்கு சாப்பாடு பரிமாற சண்முகம் தங்கச்சிங்க எல்லாம் என்னை விட்டு போக போறவங்க தானே.. என்று தங்கைகள் பற்றி தனது மனதுக்குள் இருக்கும் குமுறலை கொட்டுகிறாள். 

இதையும் படிங்க: Anna Serial: ஷண்முகம் வீட்டில் இருந்து கண்ணீரோடு வெளியேறும் பாக்கியம் - என்ன நடந்தது?

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போகிறது, பரணி சண்முகத்தை தேற்றுவாளா? என்பதை இனிவரும் எபிசோட் மூலம் தெரிந்து கொள்வோம்.
 

இதையும் படிங்க: இசக்கிக்கு மருந்து கொடுக்கும் பாக்கியம் - முத்துப்பாண்டி போட்ட கண்டிஷன்! அண்ணா சீரியல் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share