×
 

Anna Serial: பாக்கியத்துக்கு கேன்சர்! உண்மை தெரிந்து உடைந்து போன பரணி - சண்முகம்!

இசக்கி பரணியிடம், பாக்கியத்துக்கு கேன்சர் இருப்பதை கூறிய நிலையில், இன்று அண்ணா சீரியலில் என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகத்தின் கோபத்தால், இசக்கி சாப்பிடாமல் இருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க‌.

அதாவது பரணி இசக்கி பார்க்க வர அவள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்து அவளுக்கு ஆறுதல் சொல்லி சாப்பிட வைக்கிறாள். இதையடுத்து இசக்கி சாப்பிட முடியாமல் மயங்கி விழ பரணி அவளுக்கு குளுக்கோஸ் ஏற்றுகிறாள். 

அப்போது மயக்கத்தில் இசக்கி என் மேல எதுக்கு அண்ணா கோவமா இருக்க? நான் எதுக்காக உன்னை மீறி இங்க வந்தேன் தெரியுமா? அத்தைக்காகத்தான்.. அத்தைக்கு மூளையில் ஏதோ கட்டி இருக்கான் என்று புலம்ப இதைக்கேட்ட பரணி அதிர்ச்சி அடைகிறாள். 

இதையும் படிங்க: அறிவழகன் மீது ரத்னாவுக்கு வந்த பொஸசிவ்! பரணி கொடுத்த ஐடியா!

பீரோவில் இருந்து பாக்கியத்தின் ரிப்போர்ட்டை  எடுத்து பார்த்து அம்மாவுக்கு கேன்சர் என்பதை அறிந்து மேலும் அதிர்ச்சி அடைகிறாள். இந்த ரிபோட்டுடன் வீட்டுக்கு வந்த பரணி சண்முகத்தை பார்த்து இசக்கி எதுக்காக அந்த வீட்டுக்கு போனால் தெரியுமா? நீ எனக்கு அத்தை இல்ல அம்மா மாதிரியே என்று வெறும் வாய் வார்த்தையா தான் சொல்லி இருக்கே. ஆனா அவ உண்மையான புள்ளையா நடந்து இருக்கா. அம்மாவுக்கு கேன்சர் அதனால் தான் இசக்கி அங்க போய் இருக்கா என்று ரிப்போர்ட்டை தூக்கி முகத்தில் வீச சண்முகம் அதிர்ச்சி அடைகிறான். 

என்ன சொல்ற என்று சண்முகம் கலங்க, பரணி இந்த விஷயம் அம்மாவுக்கு கூட தெரியாது அண்ணனும் இசக்கியும் அம்மாவுக்கு விஷயத்தை சொல்லாமல் ட்ரீட்மெண்ட் எடுக்க வெச்சுகிட்டு இருக்காங்க என்று சொல்கிறாள்.

 

சண்முகம் உடனே அத்தையை பார்க்கணும் என்று கிளம்பி சௌந்தரபாண்டி வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடிக்க சௌந்தரபாண்டி கதவை திறக்க பரணி அவருக்கு விஷயம் தெரியாது என கண்ணை காட்டுகிறாள். பாக்கியம் சண்முகத்தின் குரலைக் கேட்டு இந்த நேரத்துல என்னடா என்று கேட்க சண்முகம் என்ன மன்னிச்சிடு என மன்னிப்பு கேட்க பாக்கியம் ஒன்றும் புரியாமல் நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன?  என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

இதையும் படிங்க: Anna Serial: சௌந்தர பாண்டியின் சதியால்... சண்முகத்தின் கோபத்திற்கு ஆளான இசக்கி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share