×
 

சீரியலில் நடிக்கும் ஸ்மிருதி இரானி... சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாயை பிளக்க வைக்கும் தொகை!!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் சின்னத்திரைக்குத் திரும்பிய நிலையில் அவரது தற்போதைய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தொலைக்காட்சித் தொடரான 'கியூங்கி சாஸ் பி கபி பாஹு தி'யின் புதிய அத்தியாயம் குறித்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக கியூங்கி சாஸ் பி கபி பாஹு தி தொடர் முதன்முதலில் 2000 முதல் 2008 வரை ஒளிபரப்பானது. அப்போது அதில் ஸ்மிருதி இரானி நடித்து வந்தார். இந்த சீரியல் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் இந்திய தொலைக்காட்சியில் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது. 2014 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று  ஒரு அமைச்சராக ஸ்மிருதி இரானி பணியாற்றியதால் அந்த சீரியலில் இருந்து அவர் விலகினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில், பாஜகவால் 2014இல் களமிறக்கப்பட்டவர் ஸ்மிருதி இரானி. இந்தி நாடக நடிகையாக அறியப்பட்ட இவர் ஹிந்தி மாநிலங்கள் அனைத்திலும் பிரபலம் என்பதால், ராகுலுக்கு எதிராக பாஜக நிறுத்தியது. 2014 தேர்தலில் ராகுலை வீழ்த்தி ஸ்மிருதி இரானி  வெற்றி பெற்றார். வெற்றி பெற்று  ஒரு அமைச்சராக ஸ்மிருதி இரானி பணியாற்றியதால் அந்த சீரியலில் இருந்து அவர் விலகினார்.

இதையும் படிங்க: மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பிய ஸ்மிருதி இரானி… வெளியானது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!

ஆனால் கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். இதை அடுத்து அவர் தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். கியூங்கி சாஸ் பி கபி பாஹு தி சீரியலின் புதிய அத்தியாயம் குறித்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஸ்மிருதி இரானி துளரி விரானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த 2வது சீன் ஜூலை 29ம் தேதி முதல் இரவு 10:30 மணிக்கு ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இதில் அவரது சம்பளம் தான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது சீசனில் நடிக்க ஸ்மிருதி இரானிக்கு ஒரு எபிசோட்டிற்கு ரூ.14 லட்சம் சம்பளம் தரப்படுவதாகப் பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம் சம்பள விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதே சீரியல் 2000ஆம் ஆண்டில் முதன்முதலில் ஒலிபரப்பானபோது, ஸ்மிருதி இரானி ஒரு எபிசோடுக்கு ரூ.1,800 மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அவரது சம்பளம் சுமார் 77,600% அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பிய ஸ்மிருதி இரானி… வெளியானது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share