×
 

சின்னத்திரையில் அடுத்த அதிர்ச்சி..!! பிரபல நடிகை விபரீத முடிவு..!! அட இவங்களா..!!

சின்னத்திரையில் கௌரி சீரியலில் நடித்துவந்த பிரபல நடிகை நந்தினி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் 'கௌரி'யில் கனகா மற்றும் துர்கா என இரட்டை வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை நந்தினி (வயது 26) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் மற்றும் கன்னட சின்னத்திரை உலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெங்களூருவின் கெங்கேரி பகுதியில் உள்ள தனது பேயிங் கெஸ்ட் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் நந்தினி. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நந்தினியின் அறையில் இருந்து கிடைத்த தற்கொலை குறிப்பில், திருமணத்திற்கு குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்தது, மன அழுத்தம் மற்றும் தந்தை இறப்புக்குப் பின் கிடைத்த அரசு வேலையை விட்டுவிட்டு நடிப்பில் தொடர விரும்பியது தொடர்பான விவகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பு பெற்றோருக்கு உரித்தானது என கூறப்படுகிறது. வேறு யாரையும் குற்றம் சாட்டவில்லை என்பதால், வெறும் தற்கொலை வழக்காகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கவர்ச்சியில் ஆடியன்ஸை கவரும் பிக்பாஸ் சௌந்தர்யா..! காந்த பார்வை .. கவர்ச்சியான லுக்கில் அட்டகாசம்..!

கன்னட தொலைக்காட்சியில் 'ஜீவ ஹூவாகிடே', 'சங்கர்ஷா', 'மதுமகளு', 'நீனாடே நா' போன்ற தொடர்களில் துணை வேடங்களில் நடித்து பிரபலமான நந்தினி, சமீபத்தில் தமிழில் 'கௌரி' தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

சவாலான இரட்டை வேடத்தில் அவரது நடிப்பு பாராட்டுகளை பெற்றது. சமீபத்தில் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு, ஷூட்டிங் இடைவேளையில் பெங்களூரு திரும்பியிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, 'கௌரி' தொடரில் அவரது கதாபாத்திரம் விஷம் குடித்து இறக்கும் காட்சியை சமீபத்தில் படமாக்கியிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், இதற்கும் தற்கொலைக்கும் தொடர்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'கௌரி' தொடரில் நந்தினியுடன் நடித்த சக நடிகர் சதீஷ், "எப்போதும் கலகலப்பாக பேசுபவர். இப்படி ஒரு முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை. யூனிட்டில் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி" என வருத்தம் தெரிவித்தார். தமிழ் சின்னத்திரை கலைஞர்கள் பலர் பெங்களூரு சென்று இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர்.

சமீபத்தில் விஜய் டிவி 'சிறகடிக்க ஆசை' நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திலிருந்து மீளாத சின்னத்திரை உலகிற்கு இது தொடர்ச்சியான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தம், குடும்ப அழுத்தங்கள் போன்றவை கலைஞர்களை பாதிக்கும் விவகாரத்தில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.

நந்தினியின் மறைவு கன்னட மற்றும் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள் பலர் தெரிவித்து வருகின்றனர். மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
 

இதையும் படிங்க: விஜயை தொடர்ந்து அரசியலில் இயக்குநர் மாரி செல்வராஜ்..! தனது அரசியல் பயணம் குறித்து அதிரடி பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share