×
 

ஜீ தமிழ் சீரியலை அப்படியே காபி அடிச்சு சிக்கிய விஜய் டிவி! டேமேஜ் பண்ணும் நெட்டிசன்கள்!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியலை அப்படியே காப்பி அடித்து கொஞ்சம் மாறுதல்களுடன் விஜய் டிவியில், தற்போது புதிய சீரியல் ஒன்று உருவாகி உள்ள நிலையில் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மட்டும் அல்ல, ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம், அண்ணா, கெட்டி மேளம், சந்தியா ராகம், போன்ற தொடர்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஜீ தமிழ் தொடர் சாயலில் விஜய் டிவி, புதுப்புது தொடர்களை களமிறக்கி வருவதாக தொடர்ந்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் தனம். இது  ZEE தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'வீரா' சீரியலின் காபி தான் என்பது நெட்டிசன்கள் கருத்து. அங்கு அண்ணன் ஆட்டோ ட்ரைவர், அவர் இறந்த பின்னர் தங்கை 'வீரா' தன் குடும்ப சுமையை ஏற்றுக்கொண்டு கரைசேர்க்கவும், குடும்பத்தின் கனவை நிறைவேற்றவும் போராடுவார்.

இதையும் படிங்க: வரும் திங்கள் முதல் ஜீ தமிழ் சீரியல்கள் ஒளிபரபரப்பில் அதிரடி மாற்றம் - முழு விவரம் இதோ !

இங்கே கணவர் ஆட்டோ ட்ரைவர். அவர் இறந்த பின்னர் மனைவி தன்னுடைய மாமியார் வீட்டு குடும்பத்தை கரை சேர்க்க போராடுவது போன்ற கதைக்களம் என்பது ஏற்கனவே வெளியான புரோமோ மூலம் தெரிந்தது. ஆனால் இதுபற்றிய காட்சிகள் இனிமேல் தான் வர உள்ளன.  மொத்தத்தில் ஜீ தமிழ் சீரியல் கதைக்களத்தில் தான் இந்த தொடர் உள்ளது.

இந்த நிலையில் தற்போது 'பூங்காற்று திரும்புமா' என்ற புத்தம் புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக, ஓரிரு நாட்களுக்கு முன் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இது ஜீ தமிழின் கெட்டிமேளம் சீரியலை போலவே இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

இதையும் படிங்க: அட்லீ படத்தில் நடிக்கும் ஹாலிவுட் நடிகை... சம்பளம் எவ்வளவு தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share