ஈனத்தனமான இர்ஃபான்..! அவர் என்ன மைசூர் மகாராஜாவா..? வெளுத்தெடுத்த வி.ஜே பாரு..!
யூடியூபர் இர்ஃபான் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.
சர்ச்சை நாயகன் யூடுபர் இர்பான் தற்போது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார். தமிழில் மிகப் பிரபலமான ஃபுட் ரிவியூர் எனப்படும் யூடியூப் பிரபலம் இர்பான் தன்னிடம் உதவி வாங்க வந்தவர்களை கேவலமாக பேசி அசிங்கப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கெட்டுப்போன உணவு பொருட்களை விற்கும் ஓட்டலுக்கு நல்ல ரேட்டிங் கொடுத்து மக்களை ஏமாற்றியது, வயதான பாட்டி ஒருவரை காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தி அதில் அவர் மாண்டு போனது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து சட்டவிரோதமாக தைரியமாக வெளிப்படுத்தியது என பல கோமாளித்தனங்கள் மற்றும் வில்லத்தனங்களை தெரிந்தே செய்து வருகிறார் இர்ஃபான்.
இதையும் படிங்க: "எனது மனைவியின் கையை தொட்டுட்டாங்க".. உதவி செய்ய போய் சர்ச்சையில் சிக்கிய இர்பான்..!
அந்த வகையில் இஸ்லாமியர்களின் பண்டிகையான புனித ரமலான் தினத்தன்று ஏழைகளுக்கு துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களை தானமாக கொடுக்கிறேன் என்ற பெயரில் காரில் அமர்ந்து கொண்டு அவர் செய்த கேவலமான அட்ராசிட்டிகளை பிரபல தொகுப்பாளினி விஜே பார்வதி கிழித்து எடுத்துள்ளார்.
இர்பானின் பெயரை குறிப்பிடாமல் வீடியோ வெளியிட்டுள்ள அவர் அந்த காரில் செல்லும் நபர் என்ன பெரிய மைசூர் மகாராஜாவா இதெல்லாம் எவ்வளவு ஈனத்தனமான கீழ்த்தனமான வேலை தெரியுமா? ஏழை மக்கள், இல்லை என்று தான் வருகிறார்கள், அவர்களை ஓட விடுவதும் மிரட்டுவதும் மிகவும் தவறான ஒரு விஷயமாகும். தனது மனைவி மீது கைவிரல் பட்டுவிடப் போவது என்றால், தான தர்மம் செய்யும் இடத்திற்கு மனைவியை ஏன் அழைத்து வர வேண்டும் என்றும் வி.ஜே பார்வதி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்
எத்தனையோ மில்லியன் டாலர்களில் பணம், பொருள் என மக்களுக்கு சேவை செய்து விட்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்த வள்ளல் ரத்தன் டாட்டாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என வி.ஜே பார்வதி அட்வைஸ் செய்தார்.
யூடியூபர் இர்பானின் இந்த தான்தோன்றித்தனமான பக்குவம் இல்லாத இந்த வீடியோக்களால் அவருடைய பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என சொல்லப்படுகிறது. யூட்யூபில் கடுமையான போட்டி நிலவி வருவதால் வித்தியாசமாக செய்கிறோம் என்ற பெயரில் கண்டன்டுக்காக இது போன்று மோசமான சம்பவங்களில் ஈடுபட்டு பெயரை கெடுத்துக் கொள்வது இவருக்கு வாடிக்கையான ஒன்று என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எம்புரானுக்கு எதிராக மல்லுக்கட்டும் தமிழக விவசாயிகள்.. முல்லைப்பெரியாறு அணை குறித்து இஷ்டத்துக்கு பேசுவதா..?