×
 

ரூ.40,000 கோடிக்கு சேல்ஸ்!! 25,000 கிலோ தங்கம் விற்பனை! அக்‌ஷய திரிதியையில் அள்ளிய பெண்கள்!!

தமிழகத்தில் அக்ஷய திரிதியை முன்னிட்டு, கடந்த இரு நாட்களாக, 25,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன; இது, மதிப்பின் அடிப்படையில் 40,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் சூழல் கடுமையாக இருந்தபோதிலும், அக்ஷய திரிதியை (Akshaya Tritiya) தினத்தை முன்னிட்டு தங்க நகை விற்பனை சாதனை அளவை எட்டியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 25,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகி, அதன் மொத்த மதிப்பு ரூ.40,000 கோடிக்கு நெருங்கியுள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்ஷய திரிதியைக்கு தங்கம் வாங்குவது செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை நாடு முழுவதும் பரவலாக இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் தங்க விற்பனை அதிகரிப்பது வழக்கம். தமிழகத்திலும் இதே நிலை காணப்படுகிறது. வழக்கமாக தினசரி சுமார் 15,000 கிலோ தங்கம் விற்பனையாகும் நிலையில், இந்த ஆண்டு அக்ஷய திரிதியையில் அது கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனைகள் மேற்கொண்டதால், மக்கள் அதிகளவில் பணம் எடுத்துச் செல்ல தயங்கினர். இருப்பினும், தங்கத்தின் விலை சமீபத்தில் குறைந்திருந்தது விற்பனையை ஊக்குவித்த முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இருந்த விலையை விட, 22 காரட் தங்கத்தின் சவரன் விலை சுமார் ரூ.20,000 வரை குறைந்தது. இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டினர்.

இதையும் படிங்க: காலையில் குறைந்து மாலையில் அதிகரித்த தங்கம் விலை!!! வாரத்தின் முதல்நாளே ஆட்டம் காட்டும் சந்தை!!

நேற்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.14,300க்கும், ஒரு சவரன் ரூ.1,14,400க்கும் விற்பனையானது. தற்போதைய சந்தை மதிப்பில் ஒரு கிலோ தங்கம் சுமார் ரூ.1.50 கோடி வரை விலை பெற்றதால், 25,000 கிலோ தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.37,500 கோடியை கடந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே அக்ஷய திரிதியையில் 25,000 கிலோ தங்கம் விற்பனையானபோதும், அப்போது கிலோவுக்கு ரூ.98 லட்சம் மட்டுமே இருந்ததால் மொத்த மதிப்பு ரூ.24,500 கோடியாக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விற்பனை அளவு ஒரே அளவில் இருந்தாலும், மதிப்பில் ரூ.13,000 கோடி வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறிய கடைகள் முதல் பெரிய நகை மால்கள் வரை அனைத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது. தேர்தல் கட்டுப்பாடுகள் இருந்தபோதும், மக்கள் தங்கம் வாங்கிய விதம் சந்தை நிலவரத்தை வெளிப்படுத்துவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: இன்று தங்கம் விலை ஏற்றமா..?? இல்லை இறக்கமா..?? நிலவரம் என்ன..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share