×
 

வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்.. சற்று இறங்கிய தங்கம் விலை..!

அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் விலை, இன்று சற்று குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் தான் இருந்தது. நேற்று முன்தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 560-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: நாளுக்கு நாள் எகிறும் தங்கம் விலை.. இன்னைக்கு ரேட் என்ன தெரியுமா..!

தங்கம் விலை நிலவரம் (16/06/2025):

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.9,305-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்தை தாண்டியுள்ளது இல்லத்தரசிகளிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குறைவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.

இதையும் படிங்க: அடபோங்கப்பா..!! இனி கவரிங் தான் வாங்கணும் போலயே.. ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share