அடபோங்கப்பா..!! இனி கவரிங் தான் வாங்கணும் போலயே.. ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை..!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது.
அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் விலை, இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது நகை பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்தது. இந்த சூழலில் நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: என்ன மக்களே ரெடியா..? தொடர் சரிவில் தங்கம் விலை.. ஆனா வெள்ளி ரேட்..?
தங்கம் விலை நிலவரம் (13/06/2025):
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனை செய்யப்படுகிவெள்ளி விலை நிலவரம்:றது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,295-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்தை தாண்டியுள்ளது இல்லத்தரசிகளிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.120-க்கும், கிலோவிற்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை.. ஆனால் எகிறிய வெள்ளி விலை..!