×
 

ஆபரணத் தங்கம் விலை சற்று உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சற்று அதிகரித்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,080 ரூபாய்க்கும், சவரன் 72,640 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: இனி தங்கம் வாங்குவது கனவில் தான்.. ஏறுமுகத்தில் விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!

தங்கம் விலை நிலவரம் (04/06/2025): 

இன்றைய நிலவரப்படி, (புதன்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 10 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 090 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 11 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 917 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து 79 ஆயிரத்து 336 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

தங்கம் விலை அதிகரித்த நிலையில் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் 90 காசுகள் அதிகரித்து, 113 ரூபாய்க்கும், கிலோவிற்கு ரூ.1,900 அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!! இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு? 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share