×
 

இன்றைய ராசிபலன் (25-01-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..!

இன்றைய பஞ்சாங்கம் 
கிழமை: ஞாயிறு கிழமை 
தமிழ் வருடம்: விசுவாவசு 
தமிழ் மாதம்: தை 
நாள்: 11 
ஆங்கில தேதி: 25 
மாதம்: ஜனவரி 
வருடம்: 2026 
நட்சத்திரம்: இன்று காலை 12-11 வரை ரேவதி பின்பு அஸ்வினி 
திதி: இன்று இரவு 09-19 வரை சப்தமி பின்பு அஷ்டமி
யோகம்: அமிர்த. சித்த யோகம் 
நல்ல நேரம்: காலை 07-30 to 8-30 
நல்ல நேரம்: மாலை 3-30 to 4-30
ராகு காலம்: மாலை 4-30 to 6-00 
எமகண்டம்: காலை 12-00 to 1-30 
குளிகை: காலை 3-00 to 4-30 
கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30 
கௌரி நல்ல நேரம்: மாலை 1-30 to 2-30 
சூலம்: மேற்கு 
சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

ஆலயதரிசனம் மனதிற்கு நிறைவைத் தரும். கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும். பயணங்களினால் நன்மைகள் கிடைக்கும். மறைமுக எதிரிகள் அடங்கிப்போவர். அரசு தொடர்பானவைகளில் லாபம் உண்டு. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு நிலம் மற்றும் மனையால் லாபம் வரும். அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (23-01-2026)..!! இந்த ராசிக்கு இன்று பணம் கொட்டப்போகுது..!!

ரிஷபம்

மனதில் தெளிவு ஏற்படும். தெய்வ வழிபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். காதல் மலரும் நினைத்த காரியம் நடந்தேறும். எதிர்பார்த்த நபரை சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி தேடி வரும் பங்குச் சந்தை லாபம் தரும். உடல் நலம் பளிச்சிடும். அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

மிதுனம்

வியாபார சிந்தளை மேலோங்கும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். கடை சொந்தக்காரர் வற்புறுத்தலால் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கடகம்

கையிருப்பு குறையும். ஆதலால், பண வரவினை தக்கவைத்துக் கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தலைவிகள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செலவழிப்பது நல்லது. வெளியூர் பயணம் லாபம் தரும், ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்
குடும்பத்தில் உள்ளவர்களிடம் வாக்குவாதங்கள் வேண்டாம். திருமண விசேஷங்களுக்குச் சென்றுவருவீர்கள், காதல் விசயங்களில் எசாரிக்கைத் தேவை. இளைஞர்கள் பொறுப்பினை உணர்வர். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பற்று வரவு வசூலாகும். உடல் நலனில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கன்னி

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பநால் சாதாரணமாக பேகம் வார்த்தைகள் கூட பிரச்சினைணயத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

வியாபாரம் விசயமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள், தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். குடும்பத்தில் மூன்றாம் நபரினை குடும்ப விசயத்தில் நுழைவதை தவிர்ப்பது நல்லது. நட்பால் ஆதாயம் உண்டு. நினைத்த நபரை கைபிடிப்பீர்கள். சைனஸ் தொந்தரவு வந்து போகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

விரும்பியவர் தேடி வருவர். உங்களை சந்தேகப்பட்டவர்கள் தலைகுனிவர்.வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செலவு செய்வீர்கள். பெண்களுக்கு சிறந்த வரண் கிடைப்பர். வியாபாரிகளுக்கு தொழிலில் மேன்மை உண்டு. வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கும். உடல் நலம் பலம் பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

வியாபாரத்தில் அவசரம் வேண்டாம். காதலில் மனம் நாடும். உத்யோகத்தில் நன்மதிப்பு கிட்டும். சொந்த வீடு வாங்கும் எண்ணம் வங்கிக்கடன் மூலம் நிறைவேறும். கணவன் மனைவி உறவு மேம்படும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். குறுகிய தூர பயணங்கள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

மகரம்

நண்பர்கள் ஒரு சிலரே உங்களிடம் உதவியுடன் இருப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு வரவேண்டிய பதவி தேடி வரும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பர். கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசு காரியங்கள் நடந்தேறும் தேக ஆரோக்கியம் சிறக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

பணப்பற்றாக்குறை நீங்கும். குடும்பத்தில் அன்னியர்களின் தலையீடு உண்டாகும். அவற்றைத் தடுக்க வேண்டும் பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றி தரும். கணவன் மனைவியிடையே இருந்துவந்த பிணக்குகள் யாவும் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

வியாபாரத்திற்காக கேட்டத் தொகை கைக்கு கிடைக்கும். லாபத்தினை பார்ப்பீர்கள். தீய பழக்கங்களிலிருந்து விலகுவது நல்லது. எந்த முடிவாக இருந்தாலும் தாங்களே முடிவெடுத்துச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் உயர் படிப்பு படிக்க வெளிநாடு செல்வர். முதுகுவலி, பல் வலி வந்து போகும். அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

இந்த பலன்கள் உங்கள் நாளை சிறப்பாக்க உதவும். ஜோதிடம் ஒரு வழிகாட்டி மட்டுமே; உங்கள் முயற்சிகளே வெற்றியின் அடிப்படை. நாளை மீண்டும் சந்திப்போம்..!

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (23-01-2026)..!! இந்த ராசிக்கு இன்று பணம் கொட்டப்போகுது..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share