×
 

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..?? ஜூன் மாதத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு..!!

மெய்நிகர் சேவைகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட தரிசன ஒதுக்கீடுகள் 21-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஜூன் மாதத்தில் ஏழுமலையான் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக ஆன்லைன் முன்பதிவு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, பல்வேறு ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வரும் நாட்களில் படிப்படியாக வெளியிடப்பட உள்ளன. பக்தர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது.

முதலில், சுப்ரபாதம், தோமாலா சேவை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற முக்கிய ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் புதன்கிழமை (நாளை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்கி வெளியிடப்படும். இவற்றுக்கான எலக்ட்ரானிக் லக்கி டிப் (குலுக்கல்) பதிவு 20-ஆம் தேதி காலை 10 மணி வரை தொடரும். குலுக்கலில் தேர்வு பெறுபவர்கள் 20 முதல் 22-ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டுகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: திருப்பதிக்கு போறீங்களா..?? பக்தர்கள் கவனத்திற்கு..!! வரும் 16ம் தேதி முதல் வருகிறது புது ரூல்ஸ்..!!

அடுத்ததாக, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை, ஜேஷ்டாபிஷேகம் ஆகிய சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இதே நாளில் மாலை 3 மணிக்கு மெய்நிகர் (விர்ச்சுவல்) சேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரிசன ஒதுக்கீடுகளும் தொடங்கும். மேலும், அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு கிடைக்கும்.

ஸ்ரீவாணி அறக்கட்டளை சார்பிலான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் அதே நாள் காலை 11 மணிக்கு வெளியாகும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால நோயாளிகளுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23-ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும். ரூ.300 கட்டணத்துடன் கூடிய சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் (Special Entry Darshan) 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இதே நாள் மாலை 3 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான விடுதிகளில் உள்ள அறைகளுக்கான முன்பதிவும் தொடங்கும்.

ஜூன் மாதம் ஏழுமலையானை தரிசிக்க திட்டமிடும் பக்தர்கள் இந்த தேதிகளை கவனத்தில் கொண்டு, சரியான நேரத்தில் இணையதளத்தில் உள்நுழைந்து முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வ தளம் மூலம் மட்டுமே பதிவு செய்வது பாதுகாப்பானது என்பதால், மோசடி தளங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் பக்தர்களின் வசதிக்காகவும், நெரிசலை தவிர்க்கவும் செய்யப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (17-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share