×
 

சர்க்கரை விலை எப்போது குறையும்? பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு புதிய சவால்..!!

பண்டிகை தேவை அதிகரித்தாலும் ஆலைகள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி விலை உயர்வை எதிர்பார்க்கின்றன” எனக் கூறியுள்ளனர்.

இந்தியாவில் சர்க்கரை விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரத்தின் முக்கிய வர்த்தக மையமான கோலாப்பூரில் 100 கிலோ சர்க்கரையின் மொத்த விற்பனை விலை கடந்த ஒரு மாதத்தில் 10.2 சதவீதம் உயர்ந்து ரூ.4,716 என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இது நாட்டின் சர்க்கரை வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த விலையாகும். டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு தொடர்ந்து வருகிறது.

இந்த உயர்வுக்குப் பின்னால் பல காரணிகள் ஒன்றிணைந்துள்ளன. நடப்பு 2025-26 பருவத்தில் சர்க்கரை உற்பத்தி ஆண்டு தேவையான சுமார் 2.85 கோடி டன்னை விடக் குறைவாகவே உள்ளது. பருவ மழை குறைவு மற்றும் எல் நினோ தாக்கம் காரணமாக கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும், ஏற்கனவே சுமார் 8 லட்சம் டன் சர்க்கரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால் உள்நாட்டு கையிருப்பு கடுமையாகச் சுருங்கியுள்ளது. அக்டோபர் 1 அன்று புதிய பருவம் தொடங்கும்போது ஆலைகளிடம் உள்ள கையிருப்பு சுமார் 35 லட்சம் டன்னாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அளவாகும்.

இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தசரா மற்றும் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளன. இந்தக் காலங்களில் இனிப்புகள், லட்டு, ஹல்வா உள்ளிட்ட பலகாரங்களுக்கான தேவை பெருமளவு அதிகரிக்கும். ஆலைகள் தங்கள் கையிருப்பை ஒரேடியாக சந்தைக்கு வெளியிடாமல், கொஞ்சம் கொஞ்சமாக விநியோகித்து விலையை மேலும் உயர்த்தும் உத்தியைப் பின்பற்றுவதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பம்பாய் சர்க்கரை வர்த்தகர்கள் சங்கத் தலைவர் அசோக் ஜெயின் உள்ளிட்டோர், “பண்டிகை தேவை அதிகரித்தாலும் ஆலைகள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி விலை உயர்வை எதிர்பார்க்கின்றன” எனக் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: ஆடி கடைசி வெள்ளி..!! இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா தொடக்கம்..!!

மத்திய அரசு ஏற்கனவே மே மாதத்தில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. மேலும் வியாபாரிகளுக்கு கையிருப்பு வரம்பு விதித்து பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இருந்தபோதிலும் சில்லறை சந்தையில் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.49 முதல் 52 வரை உயர்ந்துள்ளது. சில நகரங்களில் பேக் செய்யப்பட்ட சர்க்கரை ரூ.55 வரை விற்பனையாகிறது. இந்த உயர்வு சில்லறை விலைவாசி உயர்வுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஜூன் மாதத்தில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கைத் தாண்டிய நிலையில், சர்க்கரை விலை உயர்வு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சந்தை வல்லுநர்கள் மற்றும் டெல்லி உள்ளிட்ட வர்த்தக அமைப்புகள், தற்போதைய உயர்ந்த விலை அடுத்த மூன்று மாதங்களுக்காவது தொடரும் என எச்சரித்துள்ளனர். புதிய கரும்பு அரைப்பு நவம்பரில் தொடங்கும் வரை நிவாரணம் கிடைக்காது என்பதே பொதுவான கருத்து. ஆலைகளுக்கு லாபம் அதிகரித்தாலும், பொதுமக்களுக்கு இது கூடுதல் சுமையாக அமையும். அரசு மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (07-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share