×
 

கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் கொலை.. முட்புதரில் கிடந்த சடலம்.. நடந்தது என்ன..?

அஞ்செட்டி அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 13 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவருக்கு மஞ்சு என்ற மனைவியும், 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்களது இளைய மகன் ரோகித் (13), அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்நிலையில் ரோகித் நேற்று மாலை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் சிறுவனை கடத்தி சென்றது மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞரும், கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞரும் தான் என்று, உறவினர்கள் காவல் நிலையத்தில் நேற்று இரவே புகார் அளித்தனர். 

இதையும் படிங்க: தலைக்கேறிய கஞ்சா போதை.. மூதாட்டியை தரதரவென இழுத்து சென்ற பகீர் காட்சி.. கம்பி எண்ணும் இளைஞர்..!

ஆனால் அளிக்கப்பட்ட புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய பெற்றோர் மற்றும் உறவினர்கள், கடத்தப்பட்ட சிறுவன் குறித்து எந்த தகவலும் போலீசார் கூறவில்லை என தெரிவித்தனர். 

இந்த நிலையில் கடத்தப்பட்ட சிறுவன் அஞ்செட்டி - ஒகேனக்கல் செல்லும் சாலை ஓரத்தில் முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் கொலைக்கான காரணம் என்ன? கடத்தியவர்கள் யார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் கைது நடவடிக்கை தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுவன் கடத்தப்பட்டதாகப் புகார் அளித்தும் காவல்துறை உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஒருவேளை உடனே நடவடிக்கை எடுத்திருந்தால் தனது மகன் உயிரோடு கிடைத்திருப்பான் எனவும் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 13 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: எனக்கு என் மாமா தான் வேணும்.. 55க்கு ஆசைப்பட்டு கணவனை தீர்த்துக்கட்டிய 20 வயது இளம்பெண்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share