×
 

தமிழகமே அதிர்ச்சி... காப்பகத்தில் 9 வயது சிறுமியை மாறி, மாறி சீரழித்த மிருகங்கள்... ஆண், பெண் வார்டன்கள் கைது...!

ஒசூரில் தனியார் காப்பகத்தில் படித்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் போக்சோவில் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள காப்பகத்தில் படித்து வந்த 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்ததில் ஈடுபட்டதாக காப்பக உரிமையாளர் உட்பட 5 பேரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் திண்ணூர் பகுதியில் பெசோ என்ற பெயரில் தனியார் காப்பகம் கடந்த 33 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது, இந்த காப்பகத்தை திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சாம் கணேஷ் என்ற 61 வயது நபர் நிர்வகித்து  வந்துள்ளார். காப்பக வளாகத்திற்குள் பள்ளியும் செயல்படுகிறது. இங்கு ஃபிரிகேஜ் முதல் 5ம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்படுகிறது. காப்பகத்தில் ஆண், பெண் என 33 பேர் தங்கி உள்ளனர். தாளாளாருக்கு உறுதுணையாக மனைவி ஜோஸ்பின் என்பவர் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்

இந்த நிலையில் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு காப்பக நிர்வாகியும் பள்ளி தாளாளருமான சாம் கணேஷ் பாலியல் துன்பத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து சிறுமி தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஜனவரி மாதம் முதல் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக  தெரியவந்தது.

இதையும் படிங்க: ச்சீ... தமிழ் பேராசிரியர் செய்யுற காரியமா இது?... ஆசைக்கு இணங்கும் படி மாணவிகளிடம் செல்போனில் ஆபாச பேச்சு...!

பின்னர் சிறுமி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் வெளியில் தெரியாம இருக்க தாளாளரிடம் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஒசூரை சேர்ந்த நாதா முரளி, செல்வராஜ் மற்றும் தாளாளர் மனைவி ஜோஸ்பின், ஆசிரியை இந்திரா ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.

5 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். காப்பகத்தில் போக்சோவில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தனியாக இருந்த 14 வயது சிறுமியின் ஆடையைக் கிழித்து மானபங்கம்... அதிமுக பிரமுகர் அத்துமீறல்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share