ஏர்போட்டில் நாளை முதல் ஸ்ட்ரைக்... விமான சேவைகள் பாதிக்கும் அபாயம்!
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நாளை முதல் விமான நிலையத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விமான போக்குவரத்து துறை, உலகின் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக உள்ளது. இதன் வெற்றிக்கு, விமானங்களின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் பொறியாளர்கள் மிக முக்கியமானவர்கள். அனைத்திந்திய விமான பராமரிப்பு பொறியாளர் சங்கம் (All India Aircraft Maintenance Engineers Association - AIAMEA) போன்ற அமைப்புகள், இந்தியாவின் ஏர்போர்ட்டுகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பொறியாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் தொழில் வளர்ச்சி, பாதுகாப்பு நிலைகள் மற்றும் துறை வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.
இந்த சங்கம், விமான பராமரிப்பு பொறியாளர்களின் (Aircraft Maintenance Engineers - AME) உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, அவர்களின் பங்களிப்புகளை வலுப்படுத்தி, இந்திய விமானத் துறையின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது. விமான பராமரிப்பு பொறியாளர்கள், இந்தியாவின் 137 ஏர்போர்ட்டுகளில் (34 சர்வதேச, 81 உள்நாட்டு மற்றும் மற்றவை) பணியாற்றி, விமானங்களின் அனைத்து அமைப்புகளையும், இன்ஜின்கள், அவியானிக்ஸ், உடல் அமைப்பு, மின்சார அமைப்புகள் உள்ளிட்டவற்றை - தொடர்ந்து பரிசோதித்து, பழுதுபார்த்து, புதுப்பித்து வருகின்றனர்.
AIAMEA சங்கத்தினர், இந்தப் பணியை இன்னும் திறமையாகச் செய்ய, DGCA (Directorate General of Civil Aviation) விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றி, சான்றிதழ்களைப் பெற்று, தரமான பராமரிப்பை உறுதிப்படுத்துகின்றனர். இந்த நிலையில், அனைத்து இந்திய விமான பராமரிப்பு பொறியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரெடியா மக்களே! ஏர்போர்ட் TO கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கியாச்சு... அரசாணை வெளியீடு
மே 2, 2025 அன்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக விமான சேவைகள் தாமதமாகும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: WELCOME எடப்பாடி அண்ணா! மதுரை மண்ணில் இபிஎஸ்.. தொண்டர்கள் செம குஷி..!