×
 

“தொகுதி மறுவரையறை போரில் முதல் பின்னடைவு? விஜய் கூட்டத்தில் முக்கிய கட்சிகள் ஆப்சென்ட்..!!

அதிமுக, மநீம ஆகிய கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

 மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வாயிலாக அழைப்பிதழ்களை அனுப்பியிருந்தார். 

கூட்டம் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்தப் பின்னணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதிமுக தரப்பில், முதலமைச்சர் விஜய் கட்சித் தலைவர்களை அழைக்காமல் நேரடியாக எம்.பி.க்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்தது முறையான நடைமுறைக்கு எதிரானது என்ற கருத்து நிலவியது. வழக்கமாக அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு முதலில் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பின்னர் அவர்களது பிரதிநிதிகள் அல்லது எம்.பி.க்கள் பங்கேற்பதுதான் மரபு என்றும், நேரடியாக எம்.பி.க்களை அழைப்பது விநோதமானது என்றும் அதிமுக தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதேபோல், திமுகவும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்து உள்ளது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தேமுதிகவும் இந்த கூட்டத்தை புறக்கணித்து உள்ளது.

இதையும் படிங்க: 50+ வங்கிக்கணக்குகள்... ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 3 தவெக நிர்வாகிகள் கைது... பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க்?

இதனால் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என உறுதிப்படுத்தப்பட்டது.தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விவகாரமாகும். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய தென்மாநிலங்களின் இடங்கள் ஒப்பீட்டளவில் குறையும் அபாயம் உள்ளது என்ற அச்சம் நீண்டகாலமாக நிலவி வருகிறது. இந்தப் பின்னணியில் தமிழக அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், அதிமுகவின் புறக்கணிப்பு அறிவிப்பு இந்த முயற்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. திமுகவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காது என தெரிவித்திருப்பதால், இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளும் விலகிய நிலையில் கூட்டம் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில் 'வெற்றித் தறி' திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share