×
 

கனடா துப்பாக்கிச்சூடு! இளம்பெண் அடையாளம் தெரிந்தது!! தாய், சகோதரனையே சுட்டு வீழ்த்திய கொடூரம்!

முதலில் தாயையும், சகோதரனையும் சுட்டுக் கொன்று விட்டுத்தான் பள்ளிக்கு சென்று துப்பாக்கியால் சுட்டு வெறியாட்டம் ஆடியிருக்கிறார் என தெரிய வந்தது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதி மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த கொடூர துப்பாக்கிச்சூடு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 18 வயது ஜெஸ்ஸி வான் ரூட்செல்லார் என்ற இளம்பெண் (திருநங்கை) பள்ளிக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஒரு ஆசிரியை மற்றும் 5 மாணவ, மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 29 பேர் படுகாயமடைந்தனர்.

போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெஸ்ஸி முதலில் தனது வீட்டுக்குச் சென்று தாயாரையும் 11 வயது சகோதரனையும் (தாயின் காதலனுக்கு பிறந்த குழந்தை) சுட்டுக் கொன்றுள்ளார். அதன் பிறகு அதே துப்பாக்கியுடன் தான் படித்த அதே பள்ளிக்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இறுதியில் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜெஸ்ஸி 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதே பள்ளியில் படித்தவர். ஆனால் திருநங்கையாக மாறிய பிறகு மன அழுத்தம், கோபம், பள்ளி நிர்வாகத்தின் கண்டிப்பு ஆகியவற்றால் படிப்பை பாதியில் நிறுத்தினார். தாயார் தன்னை சரியாக கவனிக்கவில்லை, சகோதரனுக்கு அதிக பாசம் காட்டுவதாக நினைத்து கோபம் அதிகரித்தது. பள்ளி மீதும், ஆசிரியர்கள் மீதும் வெறுப்பு கொண்டிருந்த ஜெஸ்ஸி திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கூட்டணி குறித்து தலைவர் தான் முடிவெடுப்பார்! சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!

இந்த சம்பவத்தில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர் (தாய், சகோதரன், ஆசிரியை, 5 மாணவர்கள்). காயமடைந்த 29 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

கனடாவின் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய பள்ளி துப்பாக்கிச்சூடு இதுவாகும். 2020-ல் நோவா ஸ்காட்டியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டது முதலிடத்தில் உள்ளது. இந்த சம்பவம் கனடாவில் துப்பாக்கி கட்டுப்பாடு, மனநல பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் உலகெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: இனி மணிக்கணக்கா உட்கார்ந்து கடலை போட முடியாது..!! பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுகளில் வருது புது ரூல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share