×
 

#BREAKING பயணிகளின் அவசர கவனத்திற்கு... சென்னையில் திடீரென முடங்கியது விமான சேவை...!

சென்னை புறநகர் பகுதியில் திடீரென பெய்த ஒரு மணி நேர மழையால் சென்னை விமான நிலையத்தில் வருகை புறப்படும் விமானங்கள் மொத்தம் 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதி அடைந்தனர். 

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று அதிகாலை 2:30 மணியிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் பலத்த சூறைக்காற்று இடிமின்னலுடன் மழை பெய்தது. இதை அடுத்து சென்னையில் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அதாவது கத்தார் நாட்டு தலைநகர் மஸ்கட்டிலிருந்து 317 பயணிகளுடன் அதிகாலை 2:50 மணிக்கு சென்னைக்கு தரையிறங்க வந்த கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு பெங்களூருக்கு திரும்பி சென்றது.

 அதேபோல் துபாய், ஷாஜா, லண்டன் விமானங்களும் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு அதன் பின்பு மழை விட்டதும் சென்னையில் தரை இறங்கின. அதோடு சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் மொரிசியஸ், தாய்லாந்த, துபாய், சார்ஜா, லண்டன், அபுதாபி, டெல்லி, கொச்சி உள்ளிட்ட 10 விமானங்கள் சென்னையிலிருந்து தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னை புறநகர் பகுதியில் திடீரென பெய்த ஒரு மணி நேர மழையால் சென்னை விமான நிலையத்தில் வருகை புறப்படும் விமானங்கள் மொத்தம் 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதி அடைந்தனர். 

இதையும் படிங்க: காலக்கெடு நீட்டிப்பு... வருமான வரி செலுத்தாதவர்களுக்கு வெளியானது குட்நியூஸ்...! 

இதையும் படிங்க: இதுவே கடைசியா இருக்கட்டும்... டென்ஷனின் உச்சிக்கே சென்ற பிரேமலதா... தேமுதிக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share