×
 

வைரத்தை குறிவைத்த கயவர்கள்.. வியாபாரிக்கு நேர்ந்த கொடூரம்.. பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?

சென்னை வடபழனியில் வைர நகை வியாபாரியை கட்டிப்போட்ட அவரிடம் இருந்த ரூ.32 கோடி மதிப்பிலான வைர நகைகளை 4 பேர் கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் வைர வியாபாரியான சந்திரசேகர். இவரிடன் இருந்த சில வைர நகைகளை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் இடைத்தரகர் ஆரோக்கியராஜ் என்பவரை அணுகினார். அதன் பின், ஆரோக்கியராஜ் வைர நகைகளை விற்பனை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு ராகுல் என்பவரை அழைத்து கொண்டு ஆரோக்கியராஜ் அண்ணா நகரில் உள்ள சந்திரசேகர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வைர நகை மற்றும் அதற்கான விலை குறித்து விவாதித்துள்ளனர். அதன்பிறகு ஆரோக்கியராஜ் மற்றும் ராகுல் ஆகியோர் வீட்டை விட்டு சென்றனர்.

அவர்கள் சென்ற பின், சிறுது நேரம் கழித்து சிலர் போன் செய்து உள்ளனர். இவ்வாறு சந்திரசேகருக்கு போன் செய்த நபர்கள் வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலின் பெயரை கூறி வைர நகையுடன் அறைக்கு வரும்படி கூறியுள்ளனர். பெரிய நட்சத்திர ஹோட்டல் என்பதால் கண்டிப்பாக நல்ல விலைக்கு நகைகளை வாங்கிக் கொள்வார்கள் என்று சந்திரசேகர் மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இதை அடுத்து சந்திரசேகர் வைர நகையை எடுத்து கொண்டு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: 'மிளகாய் - எலுமிச்சை கட்டப்பட்ட 'டம்மி பீஸ்'ரஃபேல்..! இந்தியாவின் நெஞ்சில் குத்திய காங்., எம்.பி..!

அங்கு ஹோட்டல அறையில் 4 பேர் கொண்ட கும்பல் இருந்துள்ளது. ஆரம்பத்தில் நகைகளை சோதனை செய்த கும்பல் அவை ஒரிஜினலா என்றெல்லாம் செக் செய்து பார்த்துள்ளனர். சிறுது நேரம் பேரம் பேசுவது போலவும் பாவலா காட்டி உள்ளனர். அதன்பின், அந்த 4 பேர் கும்பல் சந்திரசேகரை தாக்கி வைர நகையை பறித்துள்ளது. அதோடு அறையின் உள்ளே கை, கால்களை கட்டி போட்ட கும்பல் வைர நகையை எடுத்து கொண்டு எஸ்கேப் ஆனது. இதற்கிடையே தான் குறிப்பிட்ட அந்த அறை நீண்ட நேரம் திறக்கப்படாததால் ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். அந்த அறையை திறந்து பார்த்தனர்.

அப்போது கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சந்திரசேகரை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்திரசேகரை மீட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை தேட துவங்கினர். ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். மர்ம கும்பல் தப்பித்த கார் எண்ணை கொண்டு விசாரணையை துவங்கினர். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய கும்பலை தீவிர சோதனையில் ஈடுபட்டு கைது செய்ய தமிழக முழுவதும் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது 

இந்நிலையில் இந்த கும்பல் தூத்துக்குடிக்கு செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சென்னையில் வைர வியாபாரியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சென்னையைச் சேர்ந்த ஜான் லாயட் ,விஜய், ரத்தீஷ், அருண் பாண்டியராஜ் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படை போலீசார் சிப்காட் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். 

இதைத்தொடர்ந்து சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த சென்னை துணை ஆணையர் தலைமையில் செயல்படும் தனிப்படையைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் சிப்காட் காவல் நிலையம் வந்து அங்கிருந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வைரம் மற்றும் கொள்ளையடித்து விட்டு தப்பி வந்த தார் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணைக்காக சென்னைக்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: அதிமுக மாஜிக்களை கொத்தாக தூக்கிய போலீஸ்.. அரக்கோணத்தில் பரபரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share