அம்மா, மகன் செய்யுற காரியமா இது?! ஆபாச படம்?! குடும்ப பெண்களுக்கு குறி!! சென்னையில் வில்லங்கம்?!
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், 2 மகன்களும் குடும்ப பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து நகைகளை பறித்ததுடன், ஆபாச படம் எடுத்து மிரட்டி உள்ளனர்.
சென்னை: சென்னை புரசைவாக்கம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரு மகன்களும் சேர்ந்து நடத்திய கொடூர மோசடி வெளியே வந்துள்ளது. அவர்கள் அழகான, பணக்கார குடும்ப பெண்களை குறி வைத்து முதலில் பாச வலையில் சிக்க வைத்து, பின்னர் காதல் வலையில் வீழ்த்தி, ஆபாச படங்கள் எடுத்து மிரட்டி நகை, பணம் பறித்து வந்துள்ளனர். இந்த வழக்கில் தாயும் ஒரு மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூத்த மகன் திலீப் தலைமறைவாகி உள்ளார்.
மோசடி கும்பலின் தலைமை சங்கீதா (54). அவரது மூத்த மகன் திலீப் (33), இளைய மகன் அங்கித் (31). இவர்கள் புரசைவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருந்தனர். அங்கு வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் மனைவியை குறி வைத்தனர்.
முதலில் தாய் சங்கீதா பாசமாக பழகி நட்பு கொண்டார். பின்னர் திலீப் காதல் வலையை வீசி அந்த பெண்ணை சிக்க வைத்தார். அவளை உறவுக்கு இழுத்து ஆபாச படங்கள் எடுத்து வைத்துக்கொண்டார்.
இதையும் படிங்க: சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! அமைச்சர்கள் பீதி!! ஆட்டத்தை ஆரம்பிக்கும் பாஜக!
பின்னர் வருமான வரி, அமலாக்கத்துறை வழக்கில் சிக்கியதாக நாடகமாடி, "கோடிக்கணக்கான பணம் முடக்கப்பட்டுள்ளது, உதவி செய்" என்று கூறி 1 கிலோ எடையுள்ள தங்க நகைகள், வைர நகைகள், 2½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்தனர். ஒரு கட்டத்தில் பெண் மறுத்தபோது, "ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம்" என்று தாய் சங்கீதா கடுமையாக மிரட்டினார்.
பயந்துபோன பெண் தன் கணவரிடம் உண்மையை சொல்லி அழுதார். உடனடியாக வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வேப்பேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தாய் சங்கீதா மற்றும் இளைய மகன் அங்கித் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆபாச படங்கள், மோசடி ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
முக்கிய குற்றவாளியான திலீப் மத்திய பிரதேசத்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவரிடம் பறிக்கப்பட்ட தங்கம், வைர நகைகள் உள்ளன. போலீசார் திலீப்பை கைது செய்ய தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர். நகைகளை மீட்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மோசடி கும்பல் ஏற்கனவே பல பெண்களை இதேபோல் ஏமாற்றியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. காதல் வலையில் சிக்கி ஆபாச மிரட்டலுக்கு ஆளான பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி செல்லும் பக்தர்களே உஷார்... தேவஸ்தானம் வெளியிட்ட அதி முக்கிய எச்சரிக்கை...!