×
 

#BREAKING திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

திருப்பரங்குன்றத்தில் தீப தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்துாணிலும் டிச.,3ல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. 

மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
 

மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது. அதனால், கோவில் முன்புறம் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை.

இதை மாற்றக்கோரியும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க உத்தரவிட கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை ஏழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், "கார்த்திகை மாதம் முருகனுக்கு உகந்தது. திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில், திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் திருப்பரங்குன்றத்தில் இந்த ஆண்டு கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, மலையின் உச்சியில் தர்கா அருகில் உள்ள தீபத்தூணில் அல்லாமல், பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே, இந்த ஆண்டு கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட கோரி  மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: சீமான் மீதான அவதூறு வழக்கு ரத்து... DIG வருண் குமார் தொடர்ந்த வழக்கில் அதிரடி காட்டிய மதுரை கோர்ட்...!

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணை முடித்து தீர்ப்புக்காக நீதிபதி ஒத்தி வைத்திருந்தார்.இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், 
 தீப தூனில்  தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கு காவல்துறை முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்
 

இதையும் படிங்க: சாதிய பெயர் நீக்கம் தொடர்பான வழக்கு... இடைக்காலத் தடை தொடரும்... அதிரடி ஆணை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share