இதுதான் ஃபர்ஸ்ட் டைம்..!! ஏன் திமுகவுடன் கூட்டணி? பிரேமலதா பரபரப்பு பிரஸ்மீட்..!!
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
திமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, எல். கே.சுதீஷ் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பின்போது போது உடன் இருந்தனர். இதனை அடுத்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுகவுடன் கூட்டணி அமைத்து விட்டதாக பிரேமலதா அறிவித்தார்.
முதன்முறையாக திமுகவுடன் கூட்டணியை இறுதி செய்துள்ள நிலையில் தனது மகிழ்ச்சி அளிப்பதாக பிரேமலதா கூறியுள்ளார். திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெறும் என்றும் கூறினார். மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: முதன்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக..!! முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு..!!
2016 இல் இந்த கூட்டணி அமைந்திருக்க வேண்டும் என்றும் கலைஞர் கருணாநிதி இறந்த போது படம் நழுவி பாலில் விழுந்ததாக கூறியிருந்தார் என கூறினார். இந்த நிலையில், பத்தாண்டுகள் கழித்து கூட்டணி அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார். தொகுதி பங்கீடு, எந்தெந்த தொகுதிகளைப் போட்டி, வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பாக குழு அமைத்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார். தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணிக்கு ஓ.கே. சொன்ன பிரேமலதா?... உதாசீனப்படுத்திய எடப்பாடி வேண்டாம்...மொத்தமாக மாறிய களம்...!