×
 

சோலி முடிஞ்சுது...திமுக கூடாரம் காலி... ரவுண்டு கட்டிய இபிஎஸ்...!

விரைவில் திமுக கூடாரம் காலி ஆகிவிடும் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்தன. குறிப்பாக, அதிமுக ஆட்சி அமைத்தால் அது கூட்டணி ஆட்சியாக இருக்கும் என்று பாஜக தலைவர்கள் கூறுவதாக வெளியான தகவல்கள், இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவை சந்தேகத்திற்குரியதாக்கியுள்ளன. 

ஆனால், இந்தக் கூற்றுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். ஏப்ரல் 16 அன்று, சென்னை சட்டமன்றத்தில் பேட்டியளித்த EPS, அமித் ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. அவர் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மட்டுமே கூறினார். தமிழ்நாட்டில் ஒரு தனி கட்சி ஆட்சி அமைக்கும்., கூட்டணி ஆட்சி இருக்காது என்று தெளிவுபடுத்தினார். அவர், தேர்தல் கூட்டணி மட்டுமே, ஆட்சி பகிர்வு இல்லை என்று கூறினார்.

இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், ஆட்சியிலும் பங்கு பெறுவோம் என் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 60 ஆண்டுகளாக ஏதாவது ஒரு கட்சியில் கூட்டணி வைத்து சாறை அவர்கள் குடித்து விடுகிறார்கள் என்றும் சக்கையை நாங்கள் பார்க்கும் சூழ்நிலைதான் உள்ளது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். நாங்கள் அதிக இடங்களில் போட்டியிடுவோம் என்றும் அரசாங்கத்திலும் ஆட்சியிலும் நாங்கள் பங்கு பெறுவோம் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எனவும் கூறினார்.

இதையும் படிங்க: “இபிஎஸுக்கு கார் மாறுவதும், கால் மாறுவதும் புதிது அல்ல” - உதயநிதி ஸ்டாலின் சாடல்...!

இந்த நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பூசல் ஆரம்பித்து விட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் உதகையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் நடத்தி வருகிறார். அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கேட்க ஆரம்பித்து விட்டதாகவும் திமுக கூடாரம் காலியாகி விடும் என்றும் விமர்சித்தார் காங்கிரசாருக்கு இப்போதாவது ஞானோதயம் வந்து விட்டதே என்றும் கூறினார்.

திமுக ஆட்சியில் கிட்னியை திருட ஆரம்பித்து விட்டதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக எம்எல்ஏவின் மருத்துவமனையில் கிட்னி திருடியது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் திமுகவினரின் மருத்துவமனைக்கு சென்றவர்கள் தங்களது உடலை முழு பரிசோதனை செய்யுங்கள் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: இ-பாஸ் ரத்து, ஏழைகளுக்கு வீடு, தாலிக்கு தங்கம்... வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share