×
 

ஆபாச படம் காண்பித்து ஓரினச்சேர்க்கை... 5 சிறுவர்களை சீரழித்த விடுதி போலி வார்டன் போக்சோவில் கைது...!

விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த போலி வார்டனான கள்ளக்குறிச்சியை சேர்ந்த அரவிந்தன் (23) என்பவரை போக்சோவில் கைது

காங்கேயம் அரசு பள்ளி மாணவர்கள் 5க்கும் மேற்பட்டோருக்கு விடுதியில் பாலியல் தொல்லை கொடுத்த போலி வார்டன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் அரசு பள்ளியில் படித்து அரசின் சமூக நீதி விடுதியில் தங்கி வந்த 5க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த போலி வார்டனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.

பள்ளிக்கு பின்புறத்தில் அரசின் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவியர், மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியாக 4 சமூக நீதி விடுதிகள் இயங்கி வருகிறது. இதில் விடுதிக்கு சுமார் 50 பேர் வீதம் தங்கி, அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இதையும் படிங்க: மனநலம் குன்றிய 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்... அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது..!

இந்நிலையில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கி வந்த விடுதியில் மாரிமுத்து என்பவர் வார்டானாக பணியாற்றி வருவதாகவும், அவர் பெரும்பாலான நேரங்களில் வராததால், அரசின் உத்தரவு இன்றி தன்னிச்சையாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அரவிந்தன் (23) என்பவரை, மாதம் ரூ. 6 ஆயிரம் சம்பளத்திற்கு பணி அமர்த்தியதாக தெரிகிறது.

கடந்த ஒரு ஆண்டாக போலி வார்டனாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் விடுதியில் தங்கி உள்ள 6-8 ம் வகுப்பு வரை பயிலும் 5க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு போலி வார்டன் செல்போனில் ஆபாச படங்களை காமித்து, பாலியல் தொல்லை கொடுத்தும், மேலும் ஒரு சில சிறார்களை ஓரின சேர்க்கைக்கு உள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறார்கள் பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆசிரியர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் காங்கேயம் போலீசில் புகார் அளித்தனர்.

இதன் பேரில் விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த போலி வார்டனான கள்ளக்குறிச்சியை சேர்ந்த அரவிந்தன் (23) என்பவரை போக்சோ சட்டத்தில் காங்கேயம் அணைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 4 வயது சிறுமியை சீரழித்த காமுகன்... போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share