×
 

இஸ்ரோ விஞ்ஞானி பாஸ்! மேட்ரிமோனியல் சைட்டில் புழுகல்!! ஐ.டி., பெண்ணிடம் ரூ.43 லட்சம் ஆட்டையை போட்டவர் கைது!

மஹாராஷ்டிராவில், திருமண இணையதள பக்கத்தில், 'இஸ்ரோ' விஞ்ஞானி என போலியாக பதிவு செய்து, ஐ.டி., பெண் ஊழியரிடம் 43 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிராவின் புனேவில், திருமண இணையதளத்தில் 'இஸ்ரோ விஞ்ஞானி' என போலியாக பதிவு செய்து, ஐ.டி. துறை பெண் ஊழியரிடம் 43 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடி காரணமாக பாதிக்கப்பட்ட பெண் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

புனே வக்காட் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண், அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திருமணம் செய்ய முடிவு செய்த அவர், 2024-ல் பிரபல திருமண தகவல் இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்தார். சில மாதங்களில் அலிபாக் பகுதியைச் சேர்ந்த 36 வயது ஜெயேஷ் பாட்டீல் என்பவர் தொடர்பு கொண்டார். தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றுவதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.

நம்பிக்கை ஏற்படுத்திய அவர், பல்வேறு காரணங்களை சொல்லி பணம் கேட்டார். "இது திருமணத்துக்குப் பிறகான எதிர்கால சேமிப்பு" என்று உறுதியளித்தார். இதை நம்பிய பெண், 2024 நவம்பர் முதல் 2025 ஜனவரி வரை பல கட்டங்களாக 43 லட்சம் ரூபாய் கொடுத்தார். இருவரும் அவ்வப்போது நேரில் சந்தித்து பேசியதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க: 12 வருட சர்ச்சைக்கு முடிவு!! முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து!! மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்!

ஆனால் தொடர்ந்த சந்திப்புகளில் ஜெயேஷ் இஸ்ரோ விஞ்ஞானி இல்லை என்பது தெரியவந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், வக்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். "திருமண வாக்குறுதி கொடுத்து பணம் பறித்தார். இஸ்ரோ விஞ்ஞானி என ஏமாற்றினார்" என்று புகாரில் குறிப்பிட்டார்.

விசாரணை நடத்திய போலீசார், ஜெயேஷ் பாட்டீல் என அடையாளம் காட்டிய நபர் உண்மையில் ஆதர்ஷ் மாத்ரே என்பவர் என கண்டறிந்தனர். தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 16.65 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள தொகையை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

விசாரணையில், மோசடி பணத்தில் கோவா சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது. திருமண ஏமாற்று மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இணையதளங்களில் பதிவு செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் இணையதள திருமண ஏமாற்றுகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: கோவையில் பயங்கர தீ விபத்து! கொழுந்துவிட்டு எரியும் பிளாஸ்டிக் குடோன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share