ரூ.50,000க்கு மனைவியை நண்பர்களுக்கு விற்ற கணவன்! தனி அறையில் அடைத்து வைத்து 4 பேர் சிரழித்த கொடூரம்!!
குஜராத்தில் கணவனே தனது மனைவியை 50 ஆயிரம் ரூபாய்க்கு நண்பர்களுக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் மனைவியை 50 ஆயிரம் ரூபாய்க்கு நண்பர்களிடம் விற்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் இந்த சம்பவத்தில் கணவன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த நிகேஷ் படேல் என்பவர் கடந்த மே 11-ஆம் தேதி தனது மனைவி காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகார் கொடுத்த இரண்டு நாட்களிலேயே நிகேஷும் திடீரென மாயமானதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து நிகேஷின் தந்தை தனது மகனும் காணாமல் போயுள்ளதாக மற்றொரு புகாரை பதிவு செய்தார்.
இந்த இரு சம்பவங்களும் சந்தேகத்தை அதிகரித்ததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சில நாட்களில் நிகேஷை கண்டுபிடித்து கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன.
இதையும் படிங்க: எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது!! 1000 ஆண்டுகளுக்கு உத்வேகமாகத் திகழும் - மோடி பெருமிதம்!
தனது மனைவியுடன் வாழ விருப்பமில்லை என்பதாலும், விவாகரத்து பிரச்னைகளை தவிர்க்கவேண்டும் என்பதாலும், நண்பர்களான சஞ்சய் தாக்கூர், அசோக் தாக்கூர் மற்றும் சச்சின் தர்பார் ஆகியோரிடம் தனது மனைவியை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக நிகேஷ் ஒப்புக்கொண்டார்.
பின்னர் போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், தன்னை ஒரு தனியிடத்தில் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தன்னிடம் இருந்த தங்க நகைகளை பறித்து விற்றுவிட்டதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும் விசாரணையில், நிகேஷ் படேலுக்கு வேறு இரண்டு பெண்களுடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. 12 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த மனைவியை பணத்திற்காக நண்பர்களிடம் விற்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக நிகேஷ் படேல், அவரது நண்பர்கள் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை சேர்த்து மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்திய நெடுஞ்சாலைகளில் புதிய புரட்சி..!! தடையற்ற சுங்கக் கட்டண முறை குஜராத்தில் அறிமுகம்..!!