×
 

தண்ணீர்லையே அடுப்பு எரியுமாம்! மாபெரும் கண்டுபிடிப்பு... வாழ்த்துகளை பகிர்ந்த சீமான்

நீரில் எரியும் அடுப்பு கண்டுபிடித்த honc நிறுவன குழுவுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நவீன உலகில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், சுத்தமான ஆற்றல் ஆதாரங்களைத் தேடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இத்தகைய பின்னணியில், HONC என்ற நிறுவனம் ஒரு அசாதாரணமான கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. நீரை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எரிசக்தி, குறிப்பாக நீரில் எரியும் அடுப்பு போன்ற தொழில்நுட்பம். இது வெறும் ஒரு கண்டுபிடிப்பு மட்டுமல்ல. இது பாரம்பரிய டிசலுக்கும் கோலுக்கும் மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது.

HONC நிறுவனத்தின் இந்தப் பயணம், உலகளாவிய ஆற்றல் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.HONC Gas என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம், நீரைப் பயன்படுத்தி பச்சை ஹைட்ரஜன் வாயுவை உருவாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இதன் மையக் கருத்து எளிமையானது. சுத்திகரிக்கப்பட்ட நீரை மின்சாரம் மூலம் பிரித்தெடுத்து, ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்வது. இந்த வாயு, பாரம்பரிய எரிசக்திகளைப் போலவே எரியும் திறன் கொண்டது,  நீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறுகளை பயன்படுத்தி, நீரில் எரியும் அடுப்பினை கண்டுபிடித்துள்ள நிகழ்வுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

HONC நிறுவனத்தின் நிறுவனர், சேலம் பேளூரைச் சேர்ந்த தமிழர், இராமலிங்கம் கார்த்திக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தியாக சுத்தமான நீரினைப் பயன்டுத்தி, இயற்கை வளங்களை அழிக்காமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், விபத்துகள் ஏற்படா வண்ணம், பாமர மக்களும் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில், மிகக்குறைந்த மின் பயன்பாட்டு செலவில் உருவாக்கப்பட்டுள்ள நீரில் எரியும் அடுப்பினை, தம்முடைய 20 ஆண்டுகால ஹைட்ரஜன் குறித்த ஆராய்ச்சியின் விளைவாக இராமலிங்கம் கார்த்தி கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது என தெரிவித்தார். 

இதையும் படிங்க: பாதிக்கப்பட்டவர் மீதே குண்டாஸ்! அடக்கி ஆள துடிக்குது திமுக… ஏர்போர்ட் மூர்த்திக்காக குரல் கொடுத்த சீமான்

நீரினை எரிபொருளாக கொண்ட சமையல் அடுப்பினை பயன்படுத்துவதன் மூலம், இனிவருங்காலங்களில் எரிபொருள் தேவைக்காக நிலம், நீர், காற்றினை மாசுபடுத்தும் கொடுமைகள் வெகுவாக குறைந்துவிடும் என்றும் கூறினார்.அந்த வகையில் இந்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் இந்த அரிய கண்டுபிடிப்பு செயல்பாட்டிற்கு வந்தால், அந்நிகழ்வு புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தித்துறையில் மிகப்பெரிய புரட்சியாகவும், அறிவியல் வளர்ச்சியில் மாபெரும் சாதனையாகவும் திகழும் என்றும் தெரிவித்தார்.

நீரில் எரியும் அடுப்பு எனும் அரிய கண்டுபிடிப்பினை மனித குல பயன்பாட்டிற்கு தந்துள்ள HONC நிறுவனர் இராமலிங்கம் கார்த்தி, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள நடிகர் சரத்குமார் மற்றும் பங்காற்றிய ஆய்வுக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: “டேய்... உன் வீட்டு வாசல்ல எவன்டா வந்து நின்னான்?” - விஜய்யை ஒருமையில் விளாசிய சீமான்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share