“டேய்... உன் வீட்டு வாசல்ல எவன்டா வந்து நின்னான்?” - விஜய்யை ஒருமையில் விளாசிய சீமான்...!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ஒருமையில் கடுமையாக சாடியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பணத்திற்காக அரசியலுக்கு வரவில்லை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக தலைவரும் நடிகருமான விஜய்யை சீமான் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். விஜய் மீது காட்டமான கருத்துகளைச் சீமான் தொடர்ந்து சொல்லி வருகிறார். பொதுக்கூட்டங்களில் எல்லாம் விஜய்யை நேரடியாகக் குறிப்பிட்டே சீமான் விமர்சித்து வருகிறார். அதேநேரம் சீமான் பற்றி இதுவரை விஜய் எந்தவொரு கருத்தும் சொல்லவில்லை.
கோவையில் நடந்த கூட்டதில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கேரியரின் உச்சத்தையும், வருமானத்தையும் விட்டு விட்டு வந்தேன் என்கிறார். டேய் உன் வீட்டு வாசல்ல எவன்டா வந்து நின்னான். உன் வாட்ச்மேன் கூட நிக்கலையடா. கலை சேவை செய்ய வந்தா, அதை போய் பாரு. படைக்களத்தோடு யாரும் வான்னு உன்னை கூப்பிடலையே, அப்புறம் எதுக்கு வர? என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஒருமையில் கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: இந்தா ஆரம்பிச்சிட்டாங்க இல்ல... விஜய் தலையில் இறங்கியது இடி... போலீஸ் கொடுத்த ஷாக்
என்னுடைய அஜித்தும், ரஜினிகாந்த் அவர்களும் தங்கள் தங்களுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை. டேய் மக்களின் பிரச்சனையை இந்த நிலத்தினுடையது டா. எம்.ஜி.ஆர் ஒன்றரை மணி நேரம் ஆனாலும் எழுதி வைத்து படிக்காமல் சொந்தமாக பேசுவார். விஜயகாந்த் மனதில் பட்டதை, மக்களின் மொழியில் இருந்து பேசுவார். தாய்மொழியை மறந்த தற்குறிகள் நிறைந்த கூட்டம் தவெக.
விஜய் என்றைக்காவது தமிழ், தமிழர்கள், தமிழர்கள் உரிமை என்ற வார்த்தைகளை பேசியிருக்காரா?. என் தம்பி பேசமாட்டாரு. அனைவரும் சமம் என்றால் உன் கட்சியை ஆந்திராவில் போய் ஆரம்பிக்க வேண்டியது தானே? என கேள்வி எழுப்பிய சீமான், அரைப்பைத்தியங்களை தலைவணங்குவதாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கு எதுவும் தெரியாதா? அது அவரோட ஸ்டைல்! பிரேமலதா ஓபன் டாக்..!